Rip Bhavatharini: தேவா முதல் ஜிவி பிரகாஷ் வரை..! பவதாரிணி பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharini: தேவா முதல் ஜிவி பிரகாஷ் வரை..! பவதாரிணி பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்

Rip Bhavatharini: தேவா முதல் ஜிவி பிரகாஷ் வரை..! பவதாரிணி பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 25, 2024 11:00 PM IST

பவதாரிணி தனது தந்தை இளையராஜா, சகோதரர்கள் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் இசையில் மட்டுமில்லாமல் பிற இசையமைப்பாளர்களான சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய பல பாடல்கள் Underrated ஆகவும் இருந்து வருகின்றன.

மறைந்த பாடகி பவதாரிணி
மறைந்த பாடகி பவதாரிணி

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பாடல் பாடியிருக்கும் இவர், தெலுங்கு, கன்னட சினிமாக்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி தனது தந்தையான இசைஞானி இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். பவதாரிணி பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியிருப்பதுடன், பாரதி என்ற படத்தில் தந்தை இளையராஜா இசையமைப்பில் பாடிய மயில்போல என்ற பாடலுக்கு தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.

தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் பிற இசையமைப்பாளர்களான சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ் குமார் உள்பட இதர இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். அத்துடன் பவதாரிணி பாடிய பாடல்கள், பல பாடல் வெளியான காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டானதுடன் தற்போது Underrated ஆகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் பாடகி பவதாரிணி பிற இசையமைப்பாளர் இசையில் பாடி ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும் சில பாடல்களை பார்க்கலாம்

சிற்பி இசையில் ஆல்ப்ஸ் மழைக்காற்று

பிரபு, கவுண்டமணி, மந்த்ரா நடித்து 1997இல் வெளியான தேடினேன் வந்தது என்ற காமெடி படத்தில் பாடகர் ஹரிகரனுடன் இணைந்து ஆல்ப்ஸ் மழைக்காற்று என்று டூயட் பாடலை பாடியிருப்பார். பாடல் வரிகளுக்கு ஏற்ப பனிபிரதேசங்களில் கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த பாடலின் விஷுவலும் அமைந்திருக்கும். இந்த படத்துக்கு சிற்பி இசையமைத்திருப்பார்.

 

தேவா இசையில் எவர் கண்டார்

விஜய், சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் தேவா இசையமைத்த துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பாடியிருப்பார். துள்ளலான ஃபாஸ்ட் பீட் இசையில் அமைந்திருக்கும் இந்த பாடலில் விஜய், கெளசல்யா டான்ஸ் அற்புதமாக அமைந்திருக்கும். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்காடி ப்ளே செய்யப்படும் பாடல்களில் ஒன்றாக இது அமைந்திருந்தது.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் பெண்ணே பெண்ணே

அதர்வா, பிரியா ஆனந்த் நடித்து, ஜிவி பிரகாஷ் குமார் இசைமைப்பில் வெளியான இரும்பு குதிரை படத்தில் இடம்பிடித்திருக்கும் பெண்ணே பெண்ணே என்ற மெலடி பாடலில் பெண் குரலாக பவதாரிணி ஒலித்து கேட்பவர்களை மெய்மறக்க செய்திருப்பார்.

 

கார்த்திக் இசையமைப்பில் உன்ன கொல்ல போறேன்

பிரபல பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமான படம் அரவான். வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி, தன்ஷிகா பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெறும் உன்ன கொல்ல போறேன் என்ற மெலடி பாடலை எம்எல்ஆர் கார்த்திகேயன் என்ற பாடகருடன் பாடியிருப்பார். நா. முத்துக்குமார் இந்த பாடல் வரிகளை எழுதியிருப்பார். படத்தில் அற்புதமான காதல் பாடலாக விஷுவல் செய்யப்பட்டிருக்கும்.

இன்னும் பல சூப்பர் ஹிட் பாடல்களை, ஏரளாமான கவனிக்கப்படாத பாடல்களையும் பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் மெலடி, துள்ளல் பாடல்களை பாடகி பவதாரிணி பாடியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 
 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.