RIB Bhavatharini: ‘அவதான் பியானோ வுல என் கையை எடுத்து வச்சா..’; அக்கா பவதாரிணி பற்றி நெகிழ்ந்த யுவன் ஷங்கர் ராஜா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rib Bhavatharini: ‘அவதான் பியானோ வுல என் கையை எடுத்து வச்சா..’; அக்கா பவதாரிணி பற்றி நெகிழ்ந்த யுவன் ஷங்கர் ராஜா!

RIB Bhavatharini: ‘அவதான் பியானோ வுல என் கையை எடுத்து வச்சா..’; அக்கா பவதாரிணி பற்றி நெகிழ்ந்த யுவன் ஷங்கர் ராஜா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2024 07:50 PM IST

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா!
யுவன் ஷங்கர் ராஜா!

அவர் பேசும் போது, “எனக்கு மியூசிக் தெரியாது. நான் மியூசிக் படிக்க வில்லை. என்னுடைய கையை முதன்முதலாக பியானோவில் தூக்கி வைத்தது என்னுடைய அக்கா பவதாரிணிதான். 

என்னை நீ வாசி என்பார். அண்ணனும், அக்காவும் பியானோ கிளாசிற்கு செல்வார்கள். அதனை பார்க்கும் நான், சரி… நாம் சும்மா வெட்டியாதானே இருக்கிறோம் என்று அவர்கள் பின்னால் செல்வேன். 

அப்படியே என்னை வற்புறுத்தி, ஊக்கப்படுத்தி இசையை கற்க வைத்து விட்டாள் பவதாரிணி. ஆகையால், எல்லாமே ஆரம்பம் ஆனது அங்கேதான்.” என்று பேசினார்.

முன்னதாக, இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, அவர் சிகிச்சை பலன்றி திடீரென்று நேற்று முன் தினம் காலமானார்; இதைக்கேட்ட இளையராஜா குடும்பத்தினர் கதறி அழுதனர். இசை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்று இருந்த இளையராஜா, மகளை மருத்துவமனையில் நேரில் பார்த்து கண்கலங்கினார்.

47 வயதான பாடகி பவதாரிணியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல். முருகன், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அவரின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் வழியாக சென்னை கொண்டுவரப்பட்டது. மாலை, பவதாரிணியின் உடல் சென்னை டி.நகரில் இருக்கும் இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, விஷ்ணு, சதீஷ், சிலம்பரசன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்

பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை குடும்பத்தினர் செய்து அடக்கம் செய்வதற்கான வேலைகளை மேற்கொண்டனர். அப்போது பவதாரணி பாடி தேசிய விருது பெற்ற,மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை குடும்பத்தினர் கூட்டாக பாடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.