தலைவர் 169: 'கண்டிப்பா அடிச்சி தூக்கிடுவாரு' - ரெடின் கிங்ஸ்லி
கண்டிப்பா படம் அடிச்சி தூக்கிடும் என தலைவர் 169 படம் குறித்து ரெடின் கிங்ஸ்லி தெரிவித்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விடுமுறைக்கு வெளியான படம் 'அண்ணாத்த' . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இவர்களுடன் கீர்த்தி சுரேஷ் , குஷ்பு , சூரி , மீனா , சதீஷ் , ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு திறந்தவுடன் வெளியான முதல் பெரிய நட்சத்திரத்தின் படம் இதுவாகும். ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், 'அண்ணாத்த' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்தது.
இதனையடுத்து ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அது மட்டுமின்றி அனிருத் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில் வேறு எந்த ஒரு தகவலும் படம் தொடர்பாக வெளியாகவில்லை.
இந்நிலையில் தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கும் ரெடின் கிங்ஸ்லி படம் தொடர்பாக பேசி உள்ளார். அவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியொன்றில், "நெல்சன் தலைவர் 169 படத்திற்கான கதையை எழுதுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இவர் படத்திற்கான முதல் பாதியை எழுதி முடித்து இருக்கிறார். அவர் அந்த வெறில இருக்காரு. கண்டிப்பா படம் அடிச்சி தூக்கிடுவாரு” என்றார்.
டாபிக்ஸ்