Tamil Debut Director: ரெபல் பிறமொழி மக்களை ஆதரிப்பவர்கள், பிரச்னை உருவாக்குபவர்கள் பற்றிய கதை - அறிமுக இயக்குநர் நிகேஷ்-rebel story about who support the other language people and who create trouble - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Debut Director: ரெபல் பிறமொழி மக்களை ஆதரிப்பவர்கள், பிரச்னை உருவாக்குபவர்கள் பற்றிய கதை - அறிமுக இயக்குநர் நிகேஷ்

Tamil Debut Director: ரெபல் பிறமொழி மக்களை ஆதரிப்பவர்கள், பிரச்னை உருவாக்குபவர்கள் பற்றிய கதை - அறிமுக இயக்குநர் நிகேஷ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2024 05:12 PM IST

கிளர்ச்சி அனைத்து மாநிலங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணி கதையாக ரெபல் திரைப்படம் உருவாகி இருந்தது. பிறமொழி மக்களை ஆதரிப்பவர்கள், பிரச்னைகளை உருவாக்குபவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி உருவாக்கியதாக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். கூறியுள்ளார்.

Tamil Debut Director: ரெபல் பிறமொழி மக்கள் ஆதரிப்பவர்கள், பிரச்னை உருவாக்குபவர்கள் பற்றிய கதை - அறிமுக இயக்குநர் நிகேஷ்
Tamil Debut Director: ரெபல் பிறமொழி மக்கள் ஆதரிப்பவர்கள், பிரச்னை உருவாக்குபவர்கள் பற்றிய கதை - அறிமுக இயக்குநர் நிகேஷ்

படத்தில் ஹீரோவாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ளார். பிரேமலு படம் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மமிதா பைஜூ தமிழில் ஹீரோயினாக இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். கருணாஸ், கல்லூரி வினோத், சுப்பிரமணியம் சிவா, செம்புலி அசோகன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

ரெபல் கதை

1990களில் கேரளாவில் மூணாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி கேரளாவில் அமைந்திருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் தமிழ் மாணவர்களை எதிரணி கும்பல், உள்ளூர் அரசியல் புள்ளிகளுடன் இணைந்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலுக்கு எதிராகவும் தமிழுக்கான உரிமையை மீட்டெடுக்கும் விதமாகவும் படத்தின் கதை அமைந்திருக்கும். தங்களை மட்டம் தட்டி கொடுமைப்படுத்தும் மலையாளிகளுக்கு எதிராக தமிழக மாணவர்கள் எப்படி வெகுண்டு எழுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

என்னதான் கதைக்களம் நன்றாக இருந்தாலும் யூகிக்கூடிய காட்சிகள், மலையாளிகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவது, நாயகன் - நாயகி காதல் என கிளிசே காட்சிகளால் படம் ரசிகர்களை பெரிதும் கவராமல் போனது.

தமிழர்கள் சந்திக்கும் பிரச்னை

நான் ஒன்றிரண்டு கதைகள் எழுதியிருந்தேன். ஆனால் அதில் எனக்கு 100 சதவீதம் திருப்தி இல்லை. நான் மூணாரைச் சேர்ந்தவன், அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பார்த்தபோது, ரெபல் படத்தின் கதையை உருவாக்கினேன்.

என் உறவினர்கள் அனுபவித்த கதைகளைக் கேட்டபின், விவரங்களைச் சேகரித்து திரைப்படக் கதையாக உருவாக்க முடிந்தது. இதை ஒரு சர்ச்சையான கதையாக பார்ப்பதை விட, மூணாறில் கணிசமான தமிழ் மக்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு கனெக்ட் ஆகும் என நினைத்தேன்.

இரண்டாவதாக, கிளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்னையை சார்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் எடுத்துக்கொண்ட கதையில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பிற மொழி மக்களை ஆதரிப்பவர்கள், பிரச்னைகளை உருவாக்குபவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி உருவாக்கினோம்.

மூணாறு பகுதியை சேர்ந்த தமிழர்கள் உணர்ந்த மற்றும் அனுபவித்த பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். ரெபெல் என்பது சினிமாவுக்கான படைப்பாற்றல் சுதந்திரத்துடன் கூட்டு அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்ட கதை" என்றார்.

பாக்ஸ் ஆபிஸில் சொதப்பல்

பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் புஸ்வானமாகியதுடன், விமர்சக ரீதியிலும் பெரிதாக பாராட்டை பெறவில்லை. இருப்பினும் எடுத்துக்கொண்ட கதைக்களம், அதில் காட்டப்பட்ட சில எதார்த்த விஷயங்கள், அரசியல் வசனங்கள் போன்றவற்றின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆகியுள்ளார் நிகேஷ் ஆர்.எஸ்.

அரசியல் கலந்த ஆக்‌ஷன் டிராமா படமாக இருந்து வரும் ரெபல் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.