Ravinder Chandrasekar: என் மனைவி தான் 8 ஆவது அதிசயம் - தயாரிப்பாளர் ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியை 8 ஆவது அதிசயம் என குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
நடிகை மகாலட்சுமியை, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார்.
ரவீந்தரும், திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இருவருமே காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பணத்திற்காகத் தான் ரவீந்தரை, மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் எனப் பேசப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறனர். அத்துடன் திருமணத்திற்குப் பிறகு மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் மாறி மாறி யூ-ட்யூப், செய்தி சேனல்களுக்கு இண்டர்வியூ கொடுத்து வந்தனர். இவர்களின் திருமணத்துக்கு ஒருபுறம் வாழ்த்தும், மறுபுறம் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருந்தன.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், மகாலட்சுமியும் தங்களின் ரொமான்டிக் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மகாலட்சுமியுடன் அவுட்டிங் சென்ற போட்டோவை தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து உள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.
அதில் ரவீந்தர் சந்திரசேகரன், "என் வாழ்க்கையின் 8 ஆவது அதிசயம், என் மனைவி" என கேப்ஷன் கொடுத்து உள்ளார். ரவீந்தர் சந்திரசேகரனின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த மகாலட்சுமி, "மக்கள் என்ன சொன்னாலும், என் இதயம் துடிக்கும் வரை நான் உங்களை நேசிப்பேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நீங்கள் தான் என் எல்லாமும்" என பதிவிட்டு உள்ளார்.
மனைவி மீது தனது தீரா காதலை ரவீந்தர் சந்திரசேகரன் வெளிப்படுத்தி உள்ளார். இருவரும் உருகி உருகி போடும் பதிவுகளுக்கு நெட்டிசன்கள் இதயத்தைப் பறக்க விட்டு வருகின்றனர்.
இதைப் பார்த்து நெட்டிசன்கள், உங்களின் காதல் மிகவும் அழகாக இருக்கிறது. மகாலட்சுமி தற்போது முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சேனல்களில் மும்மரமாக நடித்து வருகிறார்.
மகாலட்சுமி தற்போது விரைவில் சின்னத்திரை நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, சீரியல் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரவீந்தர் சந்திரசேகரனும் தயாரிப்புப் பணிகளில் உறுதுணையாக இருக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
டாபிக்ஸ்