தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rashmika Mandanna Shares Latest Work Out Video And Says My Happiest Time

Rashmika Mandanna: நான் ஹாப்பியா இருக்க இதை மட்டும் தான் செய்வேன்! ஏக் தம்மில் ராஷ்மிகா செய்த விஷயம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 30, 2024 09:58 PM IST

இனி என் ஓர்க் அவுட் விடியோவை அடிக்கடி பார்ப்பீர்கள் என்று சமீபத்தில் சொன்னது போல் தற்போது புதிய விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. உடல் மையப்படுதியை வலுப்படுத்தும் ஓர்க் அவுட்டை எந்த சிரமமும் இல்லாமல் ஏக் தம்மில் செய்கிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா

ட்ரெண்டிங் செய்திகள்

உடற்பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்த அவர், இடையில் அதை பகிர்வதை நிறுத்தனர். சினிமா ஷுட்டிங் தவிர சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வெளிநாடு சுற்றுலா பயணம் என அவர் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்ததே பிட்னஸ் தொடர்பான விடியோக்கள் பகிராமல் போனதற்கு காரணம் என ராஷ்மிகாவின் நெருங்கிய சகாக்கள் மூலம் தெரியவந்தது.

ராஷ்மிகாவின் புதிய ஒர்க் அவுட் விடியோ

இதையடுத்து கடந்த வாரம் ஒர்க் அவுட் மோடுக்கு திரும்பிய ராஷ்மிகா புதிய ஒர்க் அவுட் விடியோ ஒன்றை பகிர்ந்து, கடந்த 4 முதல் 5 மாதங்கள் வரை சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனது எனவும், இனிமேல் இதுபோல் விடியோ அடிக்கடி பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

எனது மகிழ்ச்சியான நேரம்

அவர் கூறியது போல் மற்றொரு பிட்னஸ் விடியோவை பகிர்ந்திருக்கிறார். ஏக் தம்மில் எந்த சிரமமும் இன்றி படுத்தவாறு உடலின் மையப்பகுதியை வலுப்படுத்தும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அதில், உடலின் மையப்பகுதியை வலுப்படுத்தும் ஒர்க் அவுட் மேற்கொள்வது தான் நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகளில் மிகவும் அழகாகவும், கட்டுடலுடன் இருப்பதோடு மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையும் வைத்திருப்பவராக ராஷ்மிகா உள்ளார். அத்தோடு பொது இடங்களில் ரசிகர்களை கண்டால் அவர்களிடம் கை அசைத்து ஹாய் சொல்வதையும், தன்னுடம் போட்டோ எடுக்க விரும்பும் ரசிகர்களுக்கு நின்று போஸ் கொடுப்பதையும் வழக்கமாக பின்பற்றும் நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா

ராஷ்மிகா அடுத்த படம்

ராஷ்மிகாவை நாடு முழுவதும் பிரபலமாக்கி நேஷனல் க்ரஷ் ஆக மாற்றிய படம் புஷ்பா. இந்த படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்ததுடன், பலரும் அவரை அந்த பெயரிலேயே அழைக்கிறார்கள். இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

முன்னதாக, புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகாவின் லுக் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகாவுக்கு திருமணம் ஆவது போல் படம் முடிந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனின் மனைவியாக வருவார் என தெரிகிறது. 

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதில் தெலுங்கு டாப் ஹீரோ நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சேகர் கம்மூலா படத்தை இயக்குகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்