Rashmika Mandanna Interview: ‘’என்னைப் பார்த்தால் பல பெண்களுக்கு பொறாமை'' - ஓபனாக பேசிய ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna Interview: ராஷ்மிகா மந்தனா, தனது ஆரம்ப கட்டத்தில் கொடுத்த பேட்டி ஒன்று வைரல் ஆகியுள்ளது.

Rashmika Mandanna Interview: தற்போது இந்தியாவே விரும்பும் நாயகியாக உருவெடுத்துள்ளார், ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகா கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தில் நடித்து இருந்தார். ரன்பீர் கபூரின் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில், அவரது கேரக்டரின் பெயர் கீதாஞ்சலி. அல்பமாலே என ஹீரோ சொன்ன கதையால் ஆசைப்பட்டு நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு, ராஷ்மிகா, அனிமல் படத்தில் நடித்தது குறித்து பல எதிர்மறையான கருத்துகள் வந்தன. சில காட்சிகளில் அவரது நடிப்புப் பலரை கிளர்ச்சி அடையச் செய்தது மற்றும் அதிகப்படியான லிப் லாக் காட்சிகளில் தாரளமாக ராஷ்மிகா நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமான ’புஷ்பா தி ரூல்’ படத்தின் மூலம் இந்த ஆண்டு அவர், தனது ரசிகர்களைச் சந்திப்பார். தவிர, ரெயின்போ, தி கேர்ள்பிரண்ட்ஸ் படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் சாவா என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.