Animal Movie: 'உண்மையிலேயே நல்ல விஷயம்' அனிமல் பட விமர்சனத்திற்கு ரன்பீர் கபூர் அதிரடி பதில்
உண்மையிலேயே நல்ல விஷயம். அனிமல் படத்தால் இது நடந்துள்ளது. ஒரு படம் குறைந்தபட்சம் உரையாடலை தொடங்கி வைக்க வேண்டும். ஏதாவது தவறு நடந்தால் அதை தவறு என்று சுட்டிக்காட்டி சமூகத்தில் உரையாடல் தொடங்காதவரை அதை நாம் உணரவே மாட்டோம். அந்தத் தவறை தான் படத்தில் நாங்கள் காட்டியுள்ளோம்”

ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு அனிமல் பட விமர்சனங்களுக்கு நடிகர் ரன்பீர் கபூர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர், “சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆண் ஆதிக்கம் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடல் தற்போது தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே நல்ல விஷயம். அனிமல் படத்தால் இது நடந்துள்ளது. ஒரு படம் குறைந்தபட்சம் உரையாடலை தொடங்கி வைக்க வேண்டும். ஏதாவது தவறு நடந்தால் அதை தவறு என்று சுட்டிக்காட்டி சமூகத்தில் உரையாடல் தொடங்காதவரை அதை நாம் உணரவே மாட்டோம். அந்தத் தவறை தான் படத்தில் நாங்கள் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
அனிமல் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி இந்திய அளவில் ஒரு வன்முறை ஆக்ஷன் த்ரில்லராக வெளியிடப்பட்டது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படம் வணிக ரீதியாக விமர்சிக்கப்பட்டாலும் முழு வெற்றி பெற்றது. அனிமல் திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்காக பலர் காத்திருக்கின்றனர்.