தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ram Charan Wishes Ar Rahman Happy Birthday Welcomes Him Onboard Buchi Babu Sana Rc 16

AR Rahman: ராம்சரணுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்! - இயக்குநர் யார் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 07:18 PM IST

ராம்சரணுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ராம் சரண் - ஏ.ஆர். ரஹ்மான்!
ராம் சரண் - ஏ.ஆர். ரஹ்மான்!

ட்ரெண்டிங் செய்திகள்

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது.

இந்த முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, படக் குழுவினர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தன்னுடைய 57 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், 

இந்த நிலையில் அந்தப்படத்தின் கதாநாயகன் ராம் சரண் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, படக்குழுவில் அவர் இணைந்தது தொடர்பான போஸ்டரை பகிர்ந்து இருக்கிறார்.  

  

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் உடன் வேலைபார்ப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டி இங்கே

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் தன்னுடைய 57 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த சமயத்தில் சூரியன் எஃப்.எம் சேனலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு அவர் கொடுத்த பேட்டியில், தன்னுடைய நண்பர் யார், வாழ்க்கை பற்றி அவருடைய பார்வை குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, “என்னுடைய ட்ரைவர்தான் என்னுடய நண்பர். அவர் பெயர் ராஜ். உண்மையில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள்தான் என்னுடைய நண்பர்கள். என்னுடன் வேலை பார்ப்பவர்களை பார்த்து, நீங்கள் எவ்வளவு நாட்கள் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று நான் கேட்பதுண்டு.

ஆம், 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனக்கு எல்லோருமே முன்னுக்கு வரவேண்டும் என்பதே ஆசை. என்னுடன் வேலைபார்ப்பவர்கள் யாராவது மிகவும் ஈஸியாக,முன்னேறாமல் கம்ஃபர்ட் சோனில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களை பார்த்து உன்னை கட் செய்யப்போகிறேன் என்று மிரட்டுவேன்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.