5 Years of Kaala: ரஜினி ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதா 'காலா'!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  5 Years Of Kaala: ரஜினி ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதா 'காலா'!

5 Years of Kaala: ரஜினி ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதா 'காலா'!

Karthikeyan S HT Tamil
Jun 07, 2023 06:10 AM IST

5 Years of Kaala: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருந்த 'காலா' திரைப்படம் 2018 ஆம் இதே ஜூன் 7 ஆம் நாளில் வெளியானது.

ரஜினிகாந்த், பா.ரஞ்சித் (காலா)
ரஜினிகாந்த், பா.ரஞ்சித் (காலா)

கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என்று பிரம்மாண்டங்களுடன் கூட்டணி அமைத்திருந்த ரஜினிகாந்த் முதன்முறையாக பா.ரஞ்சித்துடன் கூட்டணி சேர்ந்தது இப்படத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டியது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் ரஜினி, ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சமுத்திரக்கனி சம்பத், அருள்தாஸ், திலீபன், அரவிந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை தனுஷ், அவரது வொண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். ஒரு மலேசிய கேங்க்ஸ்டராக 'கபாலி' படத்தில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த், இந்தப் படத்தில் மும்பையில் வாழும் நெல்லை தமிழராக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி இருந்த இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

மும்பையில் வாழும் தமிழர்கள் கதைக்களம், ரஜினி காந்தின் நடிப்பு, அவருக்கே உரிய நகைச்சுவை, நில அரசியல், ஆதிக்கத்தை எதிர்கொள்வது, அனல் பறக்கும் வசனங்கள் என்று பா.ரஞ்சித் படமாக 'காலா' வந்தது. தாராவியின் காவலன் ரஜினி. இவரை மீறி தாராவியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். தாராவியின் மொத்த இடத்தையும் தனது அதிகாரத்தால் பறிக்க நினைக்கிறார் அதிகார பலம்மிக்க நானா படேகர். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

'காலா' திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றி நடை போட்டிருந்தாலும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இது ரஜினி படமா அல்லது ரஞ்சித் படமா என்று ரசிகர்கள் பலரும் அப்போதே கேள்வி எழுப்பி இருந்தனர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரஜினியை முழுமையாக நேசிக்கும் தீவிர ரஜினி ரசிகர்கள் மட்டுமே இப்படத்தையும், இதில் பேசப்பட்ட கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டனர். வழக்கமான ரஜினி படம் என்ற பிம்பத்தை உடைத்ததால் ' 'காலா' ரஜினி ரசிகர்களிடேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சு இன்றும் உள்ளது. இது படம் பார்த்த அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம். ரஜினி படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால், காலாவில் ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. ரஜினி மூலமாக இயக்குனர் பா.ரஞ்சித் பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு குரல் கொடுக்கும் ஒரு வாய்ப்பு 'காலா'

இப்படம் வெளிவந்து இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரஜினி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனாலும் நேற்று ரிலீசானது போல் உள்ளது 'காலா'. ஆனால், 5 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.