7 Years of Kabali: உலகமே கொண்டாடிய படம்! ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய கல்ட் கிளாசிக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  7 Years Of Kabali: உலகமே கொண்டாடிய படம்! ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய கல்ட் கிளாசிக்

7 Years of Kabali: உலகமே கொண்டாடிய படம்! ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய கல்ட் கிளாசிக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 22, 2023 06:05 AM IST

உலகநாயகன் கமல்ஹாசனின் நாயகன் படத்தை போல் மக்களுக்கு நன்மை செய்யும் தாதா போன்ற கதையம்சத்தை நீண்ட நாள்களாக தேடி வந்த ரஜினிக்கு அமைந்த படமாக கபாலி இருந்தது. ரஜினியின் நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு வெளிகாட்டிய இந்த படம் அவரது கல்ட் கிளாசிக் படமாகமாவும் மாறியுள்ளது.

கபாலி படத்தில் ரஜினிகாந்த்
கபாலி படத்தில் ரஜினிகாந்த்

இதைத்தொடர்ந்து படத்தின் டீசர் 2016 மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அதிகபேரால் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனை பெற்றது. அத்துடன் படத்தின் புரொமோஷன் பணிகளை படத்தயாரிப்பாளர்களை விட ரசிகர்களே செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் ஜூலை 1, ஜூலை என சொல்லப்பட்ட ரிலீஸ் தேதி பின்னர் ஜூலை 22ஆம் தேதி தமிழிலும், தெலுங்கு, இந்தி உள்பட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அத்துடன் மலாய் மொழியில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமை கபாலி படத்துக்கே உள்ளது. ரஜினியின் மாஸ் நடிப்பை பார்த்து பழிகிப்போன ரசிகர்களை இந்த படத்தில், அவரது கிளாஸ் நடிப்பு சர்ப்ரைசாகவே இருந்தது.

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எப்படி நாயகன், வேலுநாயக்கர் கதாபாத்திரமோ, அதேபோல் டார்க் ஷேடில் பல நன்மைகளை செய்யும் கபாலியாக தோன்றியிருப்பார் ரஜினிகாந்த். வழக்கமான ரஜினி படங்களில் இரு்ககும் மாஸ் மசாலா அம்சங்கள் குறைவாகவும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

வில்லன்களை பழிவாங்குதல், காணாமல் போன மனைவியை தேடுதல் என எமோஷஸ் நிறைவாக இருந்த இந்த படம் ரஜினியின் ஆரம்ப கால படங்களை நீண்ட நாள்களுக்கு பிறகு நினைவூட்டும் விதமாக அமைந்திருந்தது. இந்த படத்துக்காக தனது ரியல் கெட்டப்பான வெள்ளை தாடி, மீசையுடன் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அத்துடன் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றியிருப்பார்.

லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் முற்றிலும் புதிய அணியுடன் கூட்டணி அமைத்தார். அந்த வகையில் ரஜினி சினிமாவுக்கு வந்தபோது பிறந்திடாத பா. ரஞ்சித்தை இயக்கத்தில் நடித்த ஒப்பந்தமானார். அதேபோல் கபாலி படத்தில் ரஜினி, நாசர் தவிர மற்ற நடிகர்கள் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ரஜினியுடன் முதல் முறையாக நடிக்கும் நடிகர்களாகவே இருந்தனர்.

கதாநாயாகியாக அப்போது தோனி படம் மூலம் புகழ் பெற்ற ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்திருப்பார்கள். கபாலி படத்தில் ரஜினியுடனான காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களும் இதேபோல் பலரும் ரஜினியுடன் முதல் படத்தில் பணியாற்றினர். படத்தின் பாடல்களை கபிலன், விவேக், உமா தேவி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுத சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் நெருப்புடா பாடல், தற்போது இருக்கும் ரீல்ஸ் போன்றவை பிரபலமாவதற்கு முன்னரே பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களால் டான்ஸ் ஆடப்பட்டு விடியோக்களாக பகிரப்பட்டு டிரெண்ட் ஆக்கப்பட்டது.

ரஜினியின் அற்புதமான நடிப்பு, ரஜினியை இதுவரை பார்த்திராத வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்துடன், கதைக்கு முக்கியத்துவம் அளித்து கபாலி படத்தை உருவாக்கியிருந்தார் பா. ரஞ்சித. இந்த படத்தின் பஞ்ச வசனங்களில் ஒன்றாக மகிழ்ச்சி என ரஜினி கூறுவது அமைந்திருக்கும்.  அந்த வகையில் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்திய படமாகவே கபாலி இருந்தது. உலக அளவில் பேமஸ் ஆன இந்த படம் வசூலிலும் ரூ. 500 கோடி வரை நெருங்கியது. அத்துடன் ஆனந்த விகடன், பிலிம்பேர் விருது. எடிசன் விருது போன்ற விருதுகளையும் தட்டியது.

வெகுஜன ரசிகர்களை கவரும் விதமாக மாஸ் மசாலா அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை நடித்து வந்த ரஜினியிடம் இருக்கும் மகா நடிகனை நீண்ட நாள்களுக்கு பிறகு வெளிக்காட்டிய கபாலி படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.