இளையராஜா பேரனுக்கு பௌலிங் செய்த ரஜினிகாந்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இளையராஜா பேரனுக்கு பௌலிங் செய்த ரஜினிகாந்த்

இளையராஜா பேரனுக்கு பௌலிங் செய்த ரஜினிகாந்த்

I Jayachandran HT Tamil
May 25, 2022 05:43 PM IST

இளையராஜாவின் மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் மகன் யதீஸ்வருடன் நடிகர் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.

<p>இளையராஜாவுடன் ரஜினிகாந்த்</p>
<p>இளையராஜாவுடன் ரஜினிகாந்த்</p>

தனது மகளின் திருமண வாழ்க்கை கசப்பாக முடிந்ததால் பெரும் வேதனையில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் திடீரென இளையராஜாவை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார் ரஜினி. அப்போது இளையராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது ரஜினியிடம் சென்ற கார்த்திக் ராஜாவின் மகன் யதீஸ்வர், தன்னுடன் வந்து கிரிக்கெட் ஆடுமாறு கேட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத இளையராஜா, தன் பேரனைப் பார்த்து செல்லம் அவர் யாருன்னு தெரியுமா உனக்கு... அவரப் போயி உன்கூட விளையாடக் கூப்பிடுற என்று கூறியுள்ளார். அதற்கு சிரித்துக் கொண்டே ரஜினி கூறுகையில், சாமி விடுங்க குழந்தைதானே, நீ வா தம்பி நாம விளையாடலாம் என்று போய்விட்டார்.

பின்னர் யதீஸ்வருக்கு ரஜினி பௌலிங் செய்ய அவர் பேட்டிங் செய்துள்ளார். இருவரும் விளையாடுவதை புல்வெளியில் நின்று சிரித்தபடியே ரசித்து மகிழ்ந்திருக்கிறார் இளையராஜா. சிறிதுநேரம் அப்படி பொழுதைக் கழித்துவிட்டு மீண்டும் இளையராஜாவிடம் பேசிவிட்டு அங்கிருந்து ரஜினிகாந்த் கிளம்பிச்சென்றார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் கதை டிஸ்கஷன் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. படத்தை செம மாஸ்ஸாக ஆக்குவதற்கு ரஜினிகாந்த் பல்வேறு யோசனைகளையும் நெல்சனிடம் தெரிவித்து வருகிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் கே.எஸ் .ரவிக்குமார் எழுதுவார் என்று தெரிகிறது.

மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் விவாகரத்து செய்ததில் இருந்து மனச்சோர்வில் இருந்த ரஜினிகாந்த் இந்தப் புதிய படத்தில் கவனத்தை செலுத்திவருகிறார்.

இந்நிலையில் இளையராஜாவை சந்தித்து மனம்விட்டுப் பேசிவிட்டு திரும்பியுள்ளார் ரஜினிகாந்த்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.