Lal Salaam: 'ஜலாலி ஜலாலி’ - தன் படத்தின் டிரெய்லரை சிரித்துக்கொண்டே பார்த்த ரஜினிகாந்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lal Salaam: 'ஜலாலி ஜலாலி’ - தன் படத்தின் டிரெய்லரை சிரித்துக்கொண்டே பார்த்த ரஜினிகாந்த்

Lal Salaam: 'ஜலாலி ஜலாலி’ - தன் படத்தின் டிரெய்லரை சிரித்துக்கொண்டே பார்த்த ரஜினிகாந்த்

Marimuthu M HT Tamil
Feb 08, 2024 04:41 PM IST

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாகி வருகிறது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது

தன் படத்தின் டிரெய்லரை தானே பார்த்து ரசித்த ரஜினிகாந்த்
தன் படத்தின் டிரெய்லரை தானே பார்த்து ரசித்த ரஜினிகாந்த்

’லால் சலாம்’ டிரெய்லருக்கு ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன் 

அந்த வீடியோவில், ரஜினிகாந்த் தனது சென்னை போயஸ் கார்டன் வீட்டில் மற்றவர்களுடன் சேர்ந்து லிவிங் ரூம் பகுதியில் டிரெய்லரைப் பார்க்கிறார். அவர் ஒரு பெரிய புன்னகையை ஒளிரச் செய்கிறார். மேலும் டிரெய்லர் முடிவடையும்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது வழக்கமான தோற்றத்தில் அமர்ந்து இருக்கிறார். 

லால் சலாம் படத்தில் நடித்தவர்கள் யார்?: 

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக இயக்குகிறார். இப்படத்தை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாளை (பிப்ரவரி 9-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தந்தையை இயக்கியது குறித்து மகள் ஐஸ்வர்யா சொன்னது:-

தனது தந்தை ரஜினிகாந்தை வைத்துப் படம் இயக்கியது குறித்து இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய ஐஸ்வர்யா, "அப்பாவை இயக்குவது என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. அது ஒரு ஆசீர்வாதம். சுருக்கமாகச் சொல்வதானால், அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு மினி மாஸ்டர் கிளாஸ். அவர் செட்டில் தன்னை எவ்வாறு கையாளுகிறார். ஒரு தொழில்முறை, தொழில்துறையில் ஒரு கலைஞராக எப்படி இருக்கிறார் என்பது முழுக்க ஆச்சரியம் தருகிறது.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் வேலையைப் பற்றிய தீவிரம், அவரது வாழ்க்கையின் இந்த வயதிலும் இந்த நேரத்திலும் கூட, தொழில்துறையில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள அனைவரும் எப்போதும் அவரிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவரும் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நினைத்துப் பணியாற்றுகிறார். அதுதான் நாங்கள் இருந்த சூழ்நிலையின் அழகு என்று நான் நினைக்கிறேன். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு திரைப்பட இயக்குநரையும் போலவே ஒவ்வொரு தருணத்தையும் நான் மதிக்கிறேன். அப்பா ஒரு நடிகராக, குறிப்பாக லால் சலாமில், ஒரு பொழுதுபோக்கு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த நடிகராகவும் முத்திரையைப் பதித்துள்ளார்,"என்று அவர் மேலும் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.