Rajinikanth Fan: 8 வருடமாக முதல் நாள், முதல் காட்சி.. தலைவரின் குட்டி ரசிகன் அலப்பறை
ரஜினிகாந்தின் குட்டி ரசிகர் ஒருவர் 8 வருடமாக முதல் நாள், முதல் காட்சி பார்த்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் ஜெயிலர் படம் இன்று ( ஆகஸ்ட் 10 ) திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் படம் வெளியாகினது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, தெலுங்கு நடிகர் சுனில், மலையாளம் நடிகர் விநாயகன், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், வசந்த ரவி, யோகி பாபு உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் குட்டி ரசிகர் ஒருவர், ”8 வருடமாக முதல் நாள், முதல் காட்சி பார்த்து வருகிறார். பள்ளி அந்த நாளில் இருந்தால் கூட விடுமுறை எடுத்து கொண்டு வந்து பார்த்து வருகிறார். இதை அவர்களின் பெற்றோர்கள் ஆதரித்து வருகிறார்கள்”.
ஜெயிலர் படம் தமிழ்நாடு தவிர்த்து பிற இடங்களில் காலை 5 முதல் 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்