Rajinikanth: “வயிற்றில் ஸ்டெண்ட் வைத்த டாக்டர்கள்.. தேறும் உடல்நிலை..” - எப்படி இருக்கிறார் ரஜினிகாந்த்!
Rajinikanth: இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி மற்றும் டாக்டர் விஜய் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். - ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்?
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றைய தினம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது
அதன் படி, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி மற்றும் டாக்டர் விஜய் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நலம் சீராக இருக்கிறது.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், கவலையடைந்து, அவர் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான கேள்விகளை, சமூகவலைதளங்களில் எழுப்பி எழுப்பினர். இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி சார்பில் வீடியோ ஒன்று வெளியானது.
அதில், " ரஜினிகாந்த் சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லதா ரஜினிகாந்த் என்ன சொல்கிறார்
அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் தற்போது நலமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்பது, ஏற்கனவே மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தி, திட்டமிடப்பட்ட நிகழ்வு. அதன் படி, நேற்று மாலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்கு உள்ளாக, அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இன்று காலை 6.30 மணியளவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சிகிச்சையை மருத்துவர் சாய் சதீஷ் என்பவர்தான் மேற்கொண்டார். அவர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர்.
Elective procedure
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சையும் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வழக்கமான சிகிச்சை தான். இது அறுவை சிகிச்சை அல்ல. இதனை Elective procedure என்று அழைக்கிறார்கள். தற்போது ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் கடந்த 28ஆம் தேதி சென்னைக்கு வந்தார்.
திடீர் சிக்கலினால் சிகிச்சையா?
இந்த சிகிச்சையானது அவருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலினால் செய்யப்பட்டது அல்ல. ஏற்கனவே இது திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய சிகிச்சை முறை. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வாரங்களாகவே இது தொடர்பாக ரஜினிகாந்த் மருத்துவர் உடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார்.
அந்த ஆலோசனையின் வழியாக அந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு உடல் ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி, அவருக்கு அடி வைத்து பகுதியில் வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்த நிலையில், வீக்கம் அதிகமானதையடுத்து, ரஜினிகாந்த் இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்