Rajinikanth: வேட்டையன் பராக்.. என்ட்ரி கொடுத்த ரஜினி.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்! - வைரல் வீடியோ!
கை காட்டிய ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு - வைரல் வீடியோ!
ஜெய்பீம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார். அத்துடன் நடிகர் ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் ரசிகர்கள் அவரை சந்திப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வரிசையில் தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தப்படத்தை முடித்த உடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். அந்தப்படத்தை முடித்த பின்னர், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தை லியோ’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்