Rajinikanth: 'சன்னியாசம் சென்ற உதவி இயக்குநர்..' ரஜினி அட்வைஸால்.. சென்னை திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: 'சன்னியாசம் சென்ற உதவி இயக்குநர்..' ரஜினி அட்வைஸால்.. சென்னை திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

Rajinikanth: 'சன்னியாசம் சென்ற உதவி இயக்குநர்..' ரஜினி அட்வைஸால்.. சென்னை திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

Aarthi V HT Tamil
Sep 28, 2023 09:07 AM IST

சன்னியாசம் சென்ற உதவி இயக்குநருக்கு ரஜினிகாந்த் அறிவுரை சொல்லி அனுப்பி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய அறிவுரையால், இமயமலைக்கு சன்னியாசம் சென்ற உதவிஇயக்குனர், மீண்டும் சென்னை திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய அறிவுரையால், இமயமலைக்கு சன்னியாசம் சென்ற உதவிஇயக்குனர், மீண்டும் சென்னை திரும்பினார்.

அந்த நபர் தொடர்பாக அகில உலக ஆன்மீக இந்து மத கட்சி தனது சமூக வலைதளத்தில் , " இந்த சகோதரர் பெயர் புஷ்பராஜ் அவர்கள், மிகுந்த போற்றுதலுக்குரியவர்.. ஏனென்றல் சென்னையிலிருந்து இமயமலை மகா அவதார் ஸ்ரீ பாபாஜி குகை வரை நடந்தே சென்றவர். இவருடைய நடைபயணம் மொத்தம் 43 நாட்கள் ஆனது.

இன்று என்னை பார்த்தே தீர வேண்டும் என்று வடபழனி கோவிலுக்கு வந்தார். சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து வாய்ப்பே கிடைக்காத சூழ்நிலையில் திடீரென்று அனைத்தையும் வெறுத்து நடக்க தொடங்கிவிட்டார். மேலும் அங்கயே தங்கிவிட வேண்டும் என்று முடிவும் செய்துவிட்டார்.

சமீபத்தில் இமயமலை சென்ற ரஜினிகாந்த் அவர்கள் இவருடைய கதையை கேட்டு ஆச்சரியப்பட்டு இவருக்கு பொருளாதார உதவி செய்து நீ இங்க இருக்க கூடாது திரும்பி சென்னைக்கு போ உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த சகோதரரும் ரஜினி அவர்களின் பேச்சை மதித்து சென்னைக்கு திரும்பினார்.

இன்று என்னை வடபழனி கோயிலில் சந்தித்தார். எல்லாரையும் வாழ வைக்கும் வடபழனி ஆண்டவர் முருகனின் அருள் பெற்றார் .

ரஜினிகாந்த் அவர்களின் வாக்கு தெய்வவாக்கு என்பதை பல்வேறு நிலைகளில் நான் உணர்ந்துள்ளேன். கட்டாயம் அவர் வாக்கு பலிக்கும். இவர் சினிமாவில் ஜெயிப்பார் " என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.