Rajini: ‘கவலைப்படாதீங்க… நான் பார்த்துக்குறேன்’ - வி.ஏ.துரைக்கு, ரஜினி ஆறுதல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini: ‘கவலைப்படாதீங்க… நான் பார்த்துக்குறேன்’ - வி.ஏ.துரைக்கு, ரஜினி ஆறுதல்

Rajini: ‘கவலைப்படாதீங்க… நான் பார்த்துக்குறேன்’ - வி.ஏ.துரைக்கு, ரஜினி ஆறுதல்

Aarthi V HT Tamil
Mar 09, 2023 02:06 PM IST

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்ட வி.ஏ.துரைக்கு ஆறுதல் கூறி உள்ளார்.

வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல்
வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல்

இவரது சில படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், தான் சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து உள்ளார். தயாரிப்பாளர் வி.ஏ துரை வாழ்க்கை சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.

அவரை பார்த்துக்க ஆள் யாரும் இல்லாமல், காலில் ஆறாத ரணத்துடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் தனது நிலையை எடுத்து சொல்லி உதவி செய்யுமாறு முன்னதாக வி.ஏ.துரை வீடியோ பேசி கோரிக்கை வைத்து இருந்தார்.

இதனிடையே வி.ஏ.துரையை செல்ஃபோனில் அழைத்து தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள் என ரஜினிகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் வந்து பார்ப்பதாக ரஜினி உறுதி கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பிதாமகன் படத்தைத் தயாரித்த வி.ஏ.துரையின் நிலமையை அறிந்து நடிகர் சூர்யா இரண்டு லட்ச ரூபாயும், நடிகர் கருணாஸ் ரூபாய் 50,000 பண உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.