தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajakumaran Devayani Latest Interview About Her Love Story

Devayani Rajakumaran: கண்ணை உறுத்திய காதல்; நெருப்பாய் நின்ற சொந்தம்; பூஜை அறையில் பிடித்த பிடிவாதம் -தேவயாணி காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 17, 2024 08:14 AM IST

கல்யாணம் முடிவதற்கு முன்னதாக, அம்மா அப்பா உடன் இருந்தேன். திடீரென்று கல்யாணம் செய்து கொண்ட பிறகு மனைவி என்கிற ஒரு புதிய பரிணாமத்திற்குள் என் வாழ்க்கை நுழைந்தது. 22 வருடங்களாக வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது

ராஜகுமாரன் தேவயாணி காதல் கதை!
ராஜகுமாரன் தேவயாணி காதல் கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

சூரியவம்சம் படத்தில் இவர் துணை இயக்குநராக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான்,எனக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.என்னுடைய அம்மாவிற்கும் இவரை மிகவும் பிடிக்கும். காரணம் அவரது குணம் அப்படியாக இருந்தது. நன்றாக பழகினோம். நண்பர்கள் ஆனோம். காதல் மலர்ந்தது. 

முதலில் அவர் என்னிடம் காதலை சொன்ன பொழுது, நான் முடியாது என்று தான் மறுத்தேன்; உடனே அவர், ஏன் முடியாது முடியுமே என்றார். காதல் வீட்டிற்கு தெரிந்தது. பயங்கரமாக எதிர்த்தார்கள். 

ஆனால் நான் கல்யாணம் செய்தால் இவரைதான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நேராக பூஜை அறைக்குச் சென்றேன். கடவுளிடம், என்னுடைய வாழ்க்கையில் நான் இப்படியான ஒரு முடிவை எடுக்கிறேன். என்னுடன் துணை நில் என்று கும்பிட்டுவிட்டு, அவரை கரம் பிடித்தேன். 

கல்யாணம் முடிவதற்கு முன்னதாக, அம்மா அப்பா உடன் இருந்தேன். திடீரென்று கல்யாணம் செய்து கொண்ட பிறகு மனைவி என்கிற ஒரு புதிய பரிணாமத்திற்குள் என் வாழ்க்கை நுழைந்தது. 22 வருடங்களாக வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது. 

அவரது கணவர் ராஜகுமாரன் பேசும் போது, “ காதலை அவர் முதலில் முடியாது என்று தான் சொன்னார். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு முதலில் வேண்டாம்; ஆனால் பின்னர் வேண்டும். 

ஆகையால் தேவயாணியும் அதே போல தான். காதல் என்பது ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் நடக்க முடியாது. அவருக்கு என் மீது விருப்பம் இருப்பது தெரிந்ததால்தான், நான் அவரிடம் போய் காதலைச் சொன்னேன். ஒரு பெண்ணிடம் சென்று சும்மா காதலை சொல்வதற்கு நாம் என்ன பைத்தியக்காரங்களா...” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.