Shobana:‘மழைக்காட்சிகள் திட்டமிடப்பட்ட கொலை’; ரஜினி பட கசப்பு பற்றி ஷோபனா!
தமிழ் சினிமாவில் மழைக்காட்சிகள் திட்டமிடப்பட்ட கொலை என்று நடிகை ஷோபனா பேசியிருக்கிறார்
‘எனக்குள் ஒருவன்’ ‘விரதம்’ ‘சிவா’ ‘தளபதி’ ‘போடா போடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இவர் அண்மையில் சினி உலகம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் ரஜினியுடன் தான் நடித்த சிவா படத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து பேசியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து நடிகை ஷோபனா கூறும் போது, “ 1989 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான சிவா திரைப்படத்தில் நான் நடித்தேன். ரஜினி சார் எப்போதுமே ஜென்டில்மேன். அந்த திரைப்படத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம் ஒன்று இருக்கிறது. அன்றைய தினம் மழையில் நானும் ரஜினியும் நடிப்பது போன்ற காட்சி. ஆனால் அது பற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை. அந்த பாடலுக்காக எனக்கு வெள்ளை நிற புடவை கொடுக்கப்பட்டது. அப்போதே தெரிந்து கொண்டேன் இந்த பாடல் மழை பாடலுக்காகத்தான் என்று.
உடனே நான் என்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் நான் உள்ளே எந்த ஆடையும் அணியவில்லை. ஆகையால் நான் வீட்டுக்குச் சென்று தயாராகி வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் இன்னும் 10 நிமிடத்தில் காட்சி எடுக்கப்பட இருப்பதாகச் சொன்னார். என்னைப்பொறுத்தவரை சினிமாவில் மழை பாடல்கள் திட்டமிடப்பட்ட கொலை என்று நான் நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் அது தெரியாது.
அந்த படத்தை தயாரித்த நிறுவனம் மிகப்பெரியது. ஆகையால் படப்பிடிப்பு தாமதமாவதற்கு நான் பொறுப்பாக விரும்பவில்லை. அதனால் ஏவிஎம் ஸ்டியோவில் இருந்த ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து உள்ளே சுற்றிக்கொண்டு காட்சிக்கு ரெடியானேன். அந்த பாடலில் என்னை ரஜினி சார் தூக்குவது போல காட்சிகள் இருந்தன. அப்படி அவர் என்னை தூக்கும் போது உள்ளே இருந்த கவர் சத்தம் எழுப்பியது. அப்போது அவர் ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுத்தார். அதனை இப்போதும் என்னால் நினைவு கூற முடியும். நல்ல வேளையாக அவர் அதனை யாரிடமும் சொல்லவில்லை. அவர் செட்டில் எல்லாரும் வசதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்” என்றார்.
டாபிக்ஸ்