Raghava Lawrence: ‘எனக்கு ஏதாவதுன்னா துடிச்சு போயிருவா’ - மனைவி பற்றி லாரன்ஸ்!
ராகவா லாரன்ஸ் தன்னுடைய மனைவி பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்
நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ருத்ரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில் தன்னுடைய மனைவி பற்றி நெகிழ்ந்து பேசியிருந்தார்.
இதோ அவரது பேட்டி, “நான் என்னுடைய அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன். மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் என்னுடைய மனைவி காலில் விழுந்தும் ஆசீர்வாதம் வாங்குவேன். மனசார வாழ்த்துவாங்க. முகத்தில் அன்பு தெரியும். எனக்கு ஏதோ ஒன்று என்றால் துடித்து போய்விடுவார் .
நான் எப்படி இருக்கிறேனோ அதை அவரிடம் கண்ணாடியில் பார்க்கலாம். நான் சிரித்துக் கொண்டிருந்தால் அந்த முகம் சிரித்துக் கொண்டிருக்கும்; நான் அழுது கொண்டு இருந்தால் அந்த முகம் அழுது கொண்டிருக்கும். நான் சோர்வாக இருந்தால் அந்த முகம் சோர்வாக இருக்கும். என்னை நம்பி வந்த ஜீவன் அவள்.
எங்க அம்மா காலை தொட்டதற்கு பின்னர் அவர் காலை நான் தொடுகிறேன் என்றால் அவர் எந்த அளவு பாசிட்டிவாக இருப்பார்கள் என்பது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவரை கல்யாணம் செய்த அடுத்த மாதத்திலேயே நான் டான்ஸ் மாஸ்டராக ஆகிவிட்டேன். அதன் பின்னர் அப்படியே ஹீரோவாகி இந்த இடத்தில் நான் இருக்கிறேன். மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். எனக்கு அமைந்த அந்த மனைவிக்கு நான் இந்த நேரத்தில் மிக மிக நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
கேரளாவுக்கு பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் என்றால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றேன். அதே போல ஒரு சில விஷயங்களுக்கு நான் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். கொடுக்கும் பொழுது ஏன் கொடுக்கிறீர்கள் என்று கூட அவர் கேட்க மாட்டார். கொடுங்கள் என்பார்கள்; கொரோனா சமயத்தில் கூட 3 ½ கோடி கொடுத்தேன்; கொடுங்கள் என்று தான் அவர் சொல்வார். என்னுடைய தாயாரும் இவரும் கொடுங்கள் என்று சொல்வதால்தான் என்னால் இவ்வாறு கொடுக்க முடிகிறது.” என்றார்.
டாபிக்ஸ்