Dhanush: ஏகப்பட்ட பேரிடம் அட்வான்ஸ் வாங்கிய தனுஷ்.. தயாரிப்பாளர் சங்கம் போட்ட புது உத்தரவு
Dhanush: தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் இனி அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவு போடப்பட்டு உள்ளது.

Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று ( ஜூலை 29 ) தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து கூட்டம் நடத்தினார்கள். அதில் பல்வேறு வகையான புது தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
புது தீர்மானங்கள்
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில், “ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கனிட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 ஆவாரங்களுக்கு பிறகே OTT- தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக திமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.