"சேரனைக் கொல்ல வேல் கம்புடன் திரிந்த கும்பல்.. தலைமறைவான சேரன்..'ஓ'ன்னு அழறாங்க" பிரச்சனையை முடித்த தயாரிப்பாளர்
பாரதி கண்ணம்மா படத்தால் ஏற்பட்ட சாதிப் பிரச்சனையால் இயக்குநர் சேரனைக் கொல்ல சிலர் வேல் கம்புடன் திரிந்து வந்ததால் அவர் தலைமறைவாக இருந்தால் என தயாரிப்பாளர் காஜா மொய்தீன் கூறியுள்ளார்.

சேரன் இயக்கத்தில் முரளி, மீனா, மணிவண்ணன், வடிவேலு நடித்து மக்கள் மனங்களை வசீகரித்த பொற்காலம் படம் வெளியாகும் முன் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீன், திரைப் பிரபலம் சித்ரா லக்ஷ்மணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், " ஆல்பர்ட் தியேட்டர் மாரியப்பன் சார் என்னைய கூப்ட்டு ஒரு நல்ல படம் வந்திருக்கு பாருங்கன்னு பாரதி கண்ணம்மா படத்த பாக்கச் சொன்னாரு. நான் போய் படத்த பாத்தா கண்ணு வழியா தண்ணி ஊத்துது. அந்தப் படத்தோட நான் ரொம்ப கனெக்ட் ஆகிட்டேன். இதுனால இந்தப் படத்த எடுத்த டைரக்டரோட ஒரு படம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி சேரன தேடிட்டு இருந்தோம்.
தலைமறைவாக இருந்த சேரன்
அந்த சமயத்துல தான் பாரதி கண்ணம்மா படம் பெரிய சாதி பிரச்சனைய சந்திச்சது. இதுனால சேரன் கொஞ்ச நாளாவே பதுங்கி தான் இருந்தாரு. சேரன கொல்ல எல்லாரும் வேல் கம்பு எடுத்துட்டு வராங்க. அந்த சமயத்துல அவர என்னோட ஆபிஸ்க்கு வர சொன்னோம். அப்புறம் நாங்களே எல்லா பிரச்சனையையும் சமாளிச்சோம். இப்போ தான் அதெல்லாம் பெரிய விஷயம். அன்னைக்கு காலத்துக்கு இதெல்லாம் சாதாரண விஷயமா இருந்தது எங்களுக்கு.