Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!-producer k rajan latest interview about touching incident by superstar rajinikanth in sathya movies thanga magan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!

Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 11, 2024 07:06 AM IST

Producer K Rajan: சத்யா மூவிஸ் தயாரித்த ‘தங்கமகன்’ திரைப்படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. அதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படப்பிடிப்பிற்கே செல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. - ராஜன்!

Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!
Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!

மிஸ்டர் கிளீன்

இது குறித்து அவர் பேசும் போது, “ரஜினிகாந்த் இந்த 72 வயதிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கால்ஷீட் கொடுத்தால் அது தவறவே தவறாது. கால்ஷீட் கொடுத்த அந்த படம் முடியும் வரை, வேறு படத்திற்கும் செல்ல மாட்டார்.

ரஜினி
ரஜினி

படப்பிடிப்பில் காலை 7:30 மணிக்கெல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாக இருப்பார். 5 நிமிடத்தை கூட வீணாக்க மாட்டார். கேரவனில் உட்கார்ந்து கொண்டு சீட்டு ஆடுவது அல்லது யாருடனாவது போன் பேசிக் கொண்டிருப்பது உள்ளிட்ட வேலைகள் எல்லாம் ரஜினியிடம் சுத்தமாக இருக்காது. அவர் வந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருப்பார். வேலையின் மீது மட்டுமே அவரது கவனம் இருக்கும்.

‘தங்கமகன் ரஜினி’

சத்யா மூவிஸ் தயாரித்த ‘தங்கமகன்’ திரைப்படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. அதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படப்பிடிப்பிற்கே செல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால், அப்போதும் கூட அவர் வேறு படத்திற்கு செல்லவில்லை. மூன்று மாதங்கள் உடலுக்கு தேவையான சிகிச்சையை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் மீண்டும் கால் சீட்டை கொடுத்தார். அந்த படத்தில் முறைப்படி நடித்துக் கொடுத்தார். படம் வெளியே வந்தது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ரஜினி
ரஜினி

சத்யா மூவிஸ் ரஜினியின் சம்பளத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை பாக்கி வைத்திருந்தார்கள்.இதையடுத்து அவர்கள் அந்த பணத்தை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி அந்த பணத்தை அவரது கம்பெனி தரப்பிலிருந்து அவருக்கு ஷூட்கேசில் அனுப்பினார்கள்.

அப்போது பத்து லட்சம் என்பது மிகப் பெரிய தொகை. ரஜினியின் கைக்கு பணம் கிடைத்த மூன்றாவது நாள் ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சத்யா மூவிஸ் ஆர்.எம். வீரப்பன் வீட்டிற்கு வந்தார்கள் அவர்களிடம் அவர்கள் கையில் சத்யா மூவிஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பணப்பெட்டி அப்படியே இருந்தது. 

அவர்கள் ஆர்.எம் வீரப்பனிடம் நீங்கள் ரஜினிக்கான சம்பள பாக்கி கொடுத்து அனுப்பினீர்கள். ஆனால் ரஜினி அதை திருப்பிக் கொடுக்க சொல்லிவிட்டார். மூன்று மாதம் அவரால் படபிடிப்பு நின்றது. அதற்கான வட்டித்தொகை, செலவு உள்ளிட்டவை அனைத்தையும் நீங்கள் ஏற்று இருப்பீர்கள். அதை சமன் செய்ய இதை பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார் என்று அவர்கள் கூறினார்கள்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.