“உடம்ப வித்துதான் காசு சம்பாதிக்கணுமா.. யாருமே சப்போர்ட் இல்ல.. ஆனாலும் எனக்கு” -பிரியா பவானி ஷங்கர் பளார்!
Priya bhavani shankar: பிரியா பவானி ஷங்கர் சினிமா துறையில் தான் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
பிரபல நடிகையான பிரியா பவானி ஷங்கர் கிளாமர் ரோல்களில் நடிப்பது குறித்தான தன்னுடைய பார்வையை பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் மிகவும் கறாராக இருக்கிறேன்
இது குறித்து பிரியா பவானி ஷங்கர் பேசும் போது, “என்னுடைய உடலை நான் ஒரு விற்பனை பண்டமாக மாற்றி, என்னை நான் வியாபாரம் செய்ய மாட்டேன். அது சரி, தவறு என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. எனக்கு அதில் உடன்பாடு இல்லை அவ்வளவுதான். நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது, தவறான ஒரு விஷயத்தை, நாம் பிரதிபலித்து விட்டோமோ என்ற வருத்தத்தை நான் எதிர்கொள்ள கூடாது என்பதில் நான் மிகவும் கறாராக இருக்கிறேன்.
முடிந்த வரைக்கும் அது தொடர்பான முடிவுகளை மிகவும் கவனத்தோடு எடுக்கிறேன். ஒரு நெகட்டிவ் கேரக்டரை எனக்கு தருகிறார்கள் என்றால், அதில் நடிப்பது மட்டும்தான் என்னுடைய வேலை. ஆனால், நான் படத்தின் கதாநாயகியாக இருக்கும் பொழுது அல்லது ஒரு பாசிட்டிவான கதாபாத்திரமாக இருக்கும் பொழுது, இது இப்போது ஃபேஷன் என்று கூறி தவறான ஒன்றை என் மூலமாக நான் பார்வையாளர்களுக்கு கடத்த மாட்டேன்.
எனக்கும் இருண்ட பக்கங்கள் இருக்கின்றன
என் வாழ்க்கையிலும் இருண்ட பக்கங்கள் இருக்கின்றன. அந்தப் பக்கங்கள்தான் என்னை இன்று மனிதர்களிடமிருந்து விலக்கி, ஒரு எல்லையை உருவாக்கி, என்னை தற்காத்துக் கொள்ள பழக்கி இருக்கிறது. அந்த இருண்ட பக்கங்கள் இல்லாமல் போயிருந்தால் நான் இப்படிப்பட்ட ப்ரியா பவானி சங்கராக இங்கு உட்கார்ந்திருக்க மாட்டேன்.
இவர் உறுதுணையாக இருக்கிறார்
எனக்கு இந்த திரைத்துறையில் இவர் உறுதுணையாக இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை. என்னை அடுத்தக்கட்டத்திற்கு தள்ளிக்கொண்டு செல்வதற்கும் யாரும் இல்லை.
வலிமையை கொடுப்பவர்கள் அவர்கள்தான்
அதற்காக நான் இங்கு முழுக்க முழுக்க சுயமாக வந்தேன் என்று கூற முடியாது. நான் தொலைக்காட்சியில் இருந்து சீரியலுக்கு மாறிய போது, முதல் நாள் ஷுட்டிங் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அப்போது என்னுடைய கேமரா மேன் எனக்கு பேல் பூரி வாங்கி கொடுத்து, முதல் நாள் தானே பரவாயில்லை; பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
இப்படி சின்ன சின்ன மனிதர்கள் எனக்கு இந்த தொழிலில் இருப்பதற்கான வலிமையை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எனக்காக ஒரு படத்தை தயாரிக்காமல் இருந்திருக்கலாம். எனக்கான கதையை ரெடி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு என்னை தாங்கி பிடிப்பதற்கு உண்டான வலிமையை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்