என்ன இப்படி ஆயிடுச்சு.. திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்கு நோ - மனைவியிடம் பிரேம்ஜி படும்பாடு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்ன இப்படி ஆயிடுச்சு.. திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்கு நோ - மனைவியிடம் பிரேம்ஜி படும்பாடு?

என்ன இப்படி ஆயிடுச்சு.. திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்கு நோ - மனைவியிடம் பிரேம்ஜி படும்பாடு?

Aarthi Balaji HT Tamil
Dec 04, 2024 09:00 PM IST

திருமணத்திற்கு பிறகு தன் மனைவி போட்ட கண்டிஷன் குறித்து நடிகர் பிரேம்ஜி முதல் முறையாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

என்ன இப்படி ஆயிடுச்சு.. திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்கு நோ - மனைவியிடம் பிரேம்ஜி படும்பாடு?
என்ன இப்படி ஆயிடுச்சு.. திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்கு நோ - மனைவியிடம் பிரேம்ஜி படும்பாடு?

திருத்தணியில் பிரேம்ஜி, இந்து தம்பதியின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை அவரின் அண்ணனும், இயக்குநருமான வெங்கட் பிரபு தான் முன்னின்று நடத்தி வைத்தார்.

நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பிரேம்ஜிக்கும், இந்துவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

பிரேம்ஜி மாமியார் மசாலா

ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும் பிரேம்ஜியும், இந்துவும் தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மனைவியுடன் இணைந்து சமையல் செய்வது என என்ஜாய் செய்து வருகிறார் பிரேம்ஜி. அதை இந்து அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக எடுத்து வெளியீட்டு வருகிறஅது மட்டுமில்லாமல் பிரேம்ஜி மாமியார் மசாலா என்று மசாலா தொழிலையும் இந்துவின் தாய் செய்து வருகிறார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்தார் பிரேம்ஜி. ஆனால் தற்போது முதல் முறையாக பிரபல யூடியூப் சேனலான சினி உலகம் என்ற சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார் பிரேம்ஜி. 

மனைவி போட்ட கண்டிஷன்

அப்போது அவர் தனது திருமணம் வாழ்க்கை குறித்து பேசுகையில், “ என் மனைவி இந்துவிடம் எல்லா விஷயமும் பிடிக்கும், ஆனால் என் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்ல மட்டும் எனக்கு அனுமதி கிடையாது. 

திருமணத்திற்கு முன்பாக பார்ட்டிக்கு நிறைய செல்வேன். ஆனால் இப்போது அதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்கவில்லை. மாதத்திற்கு ஒரு முறை தான் சரி என சொல்லுவார். அது மட்டுமில்லை இரவு 11.30 மணி அல்லது 12 மணி ஆகிவிட்டது என்றால் உடனே மனைவியிடம் இருந்து அழைப்பு வந்துவிடும்.எங்க இருக்கீங்க, எப்போ வருவிங்க என கொஞ்சம் கண்டிப்பாக கேட்பார் “ என்றார்.

இந்து யார்?

45 வயதாகியும் ஏன் பிரேம்ஜி திருமணம் செய்யாமல் இருக்கிறார்? என்ற பேச்சு தான் எங்கு பார்த்தாலும் அவரை அனைவரும் கேட்பார்கள். ஆனால் தான் முரட்டு சிங்கிள் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில் திடீரென பிரேம்ஜி திருமணம் நடந்தது. இந்துவிற்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளதாம். அவர் இதற்கு முன்பாக வங்கி துறையில் பணியாற்றிய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சினி உலகம்

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.