HBD Alphonse Puthren: ரசிகர்களின் மனதை பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கச் செய்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பிறந்த நாள்
பிரேமம் படத்தை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
அல்போன்ஸ் புத்திரன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அவர் முக்கியமாக மலையாள சினிமாவில் பணியாற்றுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாளம் - தமிழ் இருமொழி சஸ்பென்ஸ்-த்ரில்லரான நேரம் (2013) படத்தின் வாயிலாக திரையுலகில் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அவரது இரண்டாவது படம் பரபரப்பான பிளாக்பஸ்டர் காதல் திரைப்படமான பிரேமம் (2015) ஆகும். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அல்போன்ஸ் புத்திரன் கேரளாவின் ஆலுவாவில் 1984ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். மவுண்ட் தாபோர் பள்ளி களமச்சேரி, செயின்ட் அலோசியஸ் உயர்நிலைப் பள்ளி வடக்கு பரவூர் உள்ளிட்ட பள்ளிகளிலும், அமிர்தா வித்யாலயத்தில் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். ஆலுவாவிலுள்ள MES கல்லூரி மாரம்பள்ளியில் தனது இளங்கலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (BCA) படித்தார், பின்னர் சென்னைக்கு வந்தார், சென்னை S.A.E. கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ பெற்றார்.
பட்டம் பெற்ற பிறகு, அல்போன்ஸ் குறும்படங்கள் மற்றும் இசை வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினார். Arkan மற்றும் Sutrum Vizhi அவரது ஆரம்பகால படைப்புகள், கல்லூரியில் எடுத்தார். 2008 இல், அவர் க்ளிங் க்ளிங் என்ற குறும்படத்தை உருவாக்கினார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நேரம் என்ற குறும்படமாகும். அல்போன்ஸ் பின்னர் ஃப்ளேவர்ஸ் என்ற இசை வீடியோவை உருவாக்கினார், இதன் வீடியோ ஸ்டாப் மோஷன் நுட்பத்தைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டது. அவரது அடுத்த குறும்படம் தி ஏஞ்சல், இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ராஜேஷ் முருகேசனின் இசையில் தாஹம் என்ற மலையாள இசை வீடியோவை அல்போன்ஸ் புத்ரன் இயக்கினார்.
சச்சின்-ஸ்ரீஜித் இசையில், யுவ்வ் ஆல்பத்தில் இருந்து நெஞ்சோடு சேர்ந்த இசை வீடியோவை அல்போன்ஸ் புத்ரன் இயக்கினார். நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நஸீம் நடித்த இந்த வீடியோ மிகப் பிரபலமானது. அவரது அடுத்த குறும்படம் எலி - ஒரு சிறந்த கதை, இதில் பாபி சிம்ஹா, நிவின் பாலி மற்றும் ராஜீவ் பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர் மற்றும் நடிகர்/இயக்குனர்/பாடகர் வினீத் ஸ்ரீனிவாசனால் தயாரிக்கப்பட்டது.
ஃபாஸ்ட் ஃபுட் சங்கிலியான பேங்க்ஸ் ஃபிரைடு சிக்கனுக்கான விளம்பரத்தை இயக்கியதன் மூலம் அல்போன்ஸ் புத்திரன் விளம்பரத் துறையில் நுழைந்தார்.
அதன்பிறகே, தனது குறும்படமான நேரத்தை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார். அவரே திரைக்கதை எழுதி, இயக்கி எடிட்டிங் பணிகளையும் கவனித்தார். அதைத் தொடர்ந்து, பிரேமம் படத்தை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. தமிழில் சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படம் போன்ற கதைதான் பிரேமம். ஆனால், அவர் அதை இயக்கியிருந்த விதம் சிறப்பான இருந்து சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
அல்போன்ஸ் அலீனா மேரி ஆண்டனியை 26 ஆகஸ்ட் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். இவர் அனன்யா பிலிம்ஸின் உரிமையாளரான பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகள் ஆவார். அவர்களுக்கு ஈதன் என்ற மகனும், ஐனா என்ற மகளும் உள்ளனர்.
டாபிக்ஸ்