Vijayakanth Love: காவி வேஷ்டி.. ருத்ராட்ச மாலை.. பெண் பார்க்க கேப்டன் வந்த கோலம்.. - பிரேமலதா பேட்டி!
பிரேமலதா விஜய்காந்த், விஜய்காந்த் தன்னை பெண் பார்க்க வந்த அழகான தருணம் பற்றி பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதற்கு சான்றாக அமைந்தது எங்களுடைய திருமணம். நான் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது
கேப்டனுடைய குடும்பம் மதுரையில் இருக்கிறது.என்னுடைய குடும்பம் வேலூரில் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் எந்த ஒரு தொடர்புமே கிடையாது. கேப்டன் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் சபரிமலைக்கு மாலை போடுவார். நாற்பத்து எட்டு நாட்கள் விரதம் இருந்து ருத்ராட்ச மாலை, காவி வேஷ்டி அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்வார்.
அவர் என்னை பெண் பார்க்க வந்த போதும் அப்படித்தான் வந்தார். அப்போது அவர் காவி வேஷ்டி உடுத்தி வந்தார். காலில் செருப்பு இல்லை. அவர் அவர் அவ்வளவு சிம்பிளாக நடந்து வருவதை பார்த்த என்னுடைய அப்பா, அவரை ஒரு ஹீரோவாகவோ அல்லது மாப்பிள்ளை ஆகவோ பார்ப்பதற்கு மாற்றாக கேப்டனை தன்னுடைய சகோதரராக பார்த்தார்.
அங்கேயே அவர் நான் பெண் கொடுத்தால் இவருக்குத்தான் கொடுப்பேன் என்று அதிரடியாக முடிவு எடுத்தார். பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது, அனைவரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்தனர். சினிமாக்காரனாக இருக்கிறார் எப்படி இருப்பார் என்று தெரியவில்லையே என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் என்னுடைய தாயும் தந்தையும் விஜயகாந்த் தான் தங்களுடைய மருமகன் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்கள். “ என்று பேசினார்
நன்றி: இந்தியா கிளிட்ஸ்!
டாபிக்ஸ்