Sneha: 'நீ என் வாழ்வின் பொக்கிஷம்' - மனைவிக்கு உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரசன்னா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sneha: 'நீ என் வாழ்வின் பொக்கிஷம்' - மனைவிக்கு உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரசன்னா

Sneha: 'நீ என் வாழ்வின் பொக்கிஷம்' - மனைவிக்கு உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரசன்னா

Aarthi V HT Tamil
Oct 12, 2023 12:02 PM IST

பிரசன்னா தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 சினேகா, பிரசன்னா
சினேகா, பிரசன்னா

இப்போது அவர் தனது அன்பு மனைவியின் பிறந்தநாளுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரசன்னா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா. நீ என் பொக்கிஷம். உங்களுடன் அழகான படங்களையும் இன்னும் பல அழகான நினைவுகளையும் சேகரித்துக் கொண்டே இருக்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

சினேகாவுடன் பல நல்ல தருணங்களைக் கைப்பற்றும் ஒரு வீடியோவும் அத்துடன் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு சினேகா, “ஐ லவ் யூ அப்பா” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

2012 ஆம் ஆண்டு சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் திருமணம் நடந்தது. தன்னை விட ஒரு வயது இளையவரை திருமணம் செய்ததற்கு முதலில் சினேகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இருவரும் சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பிரிந்ததாக பல சந்தர்ப்பங்களில் வதந்திகள் வெளிவந்தாலும், சினேகாவும் பிரசன்னாவும் காதலிப்பதால் அதையெல்லாம் மறுத்தனர்.

சினேகாவின் இயற்பெயர் சுபாஷினி ராஜாராம் நாயுடு. தனது 19 வயதில் மலையாளத்தில் ’இங்கனே ஒரு நிலாப்பாக்‌ஷி’ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

முன்னதாக இப்படத்தில் 7 கிளாஸிக்கல் பாடல்கள் இருப்பதாகவும், அதற்கு நடனம் தெரிந்தவர்கள் வேண்டும் என்று இப்பட இயக்குநர்கள் அனில் - பாபு ஆகியோர் தேடும்போது, சினேகாவின் நடனத்திறமை பற்றி தெரியவர பின், தனது முதல் படத்தில் கமிட் ஆகினார்.

கடைசியாக நடிகை சினேகா, தமிழில் நடிகர் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் படத்தில் நடித்து இருந்தார். தற்போது தெலுங்கிலும் தொடர்ச்சியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.