Prakash Raj: மொத்தமா 10 கிலோ இருந்துகிட்டு...அந்த பசி அவனுக்கு இருக்கு" - பிரகாஷ் ராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prakash Raj: மொத்தமா 10 கிலோ இருந்துகிட்டு...அந்த பசி அவனுக்கு இருக்கு" - பிரகாஷ் ராஜ்

Prakash Raj: மொத்தமா 10 கிலோ இருந்துகிட்டு...அந்த பசி அவனுக்கு இருக்கு" - பிரகாஷ் ராஜ்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 06, 2024 09:15 PM IST

Prakash Raj: மக்கள் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது. எஸ். ஜே. சூர்யா ஆசை படத்தில் எனக்கு அசிஸ்டென்ட் டைரக்டராக அறிமுகம் ஆனார்.

Prakash Raj: மொத்தமா 10 கிலோ இருந்துகிட்டு...அந்த பசி அவனுக்கு இருக்கு" - பிரகாஷ் ராஜ்
Prakash Raj: மொத்தமா 10 கிலோ இருந்துகிட்டு...அந்த பசி அவனுக்கு இருக்கு" - பிரகாஷ் ராஜ்

பெருமையாக இருக்கிறது.

அவர் பேசும் போது, ‘திருவிளையாடல் ஆரம்பம் படத்தில், நான் தனுஷை பார்த்து ஒரு வசனம் ஒன்றை பேசி இருப்பேன். அதில் 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சு கிட்டு துள்ளிக்கிட்டு இருக்கியா நீ என்று குறிப்பிட்டு இருப்பேன்.

அவர் இன்னும் துள்ளிக்கிட்டு தான் இருக்கிறார். தனுஷை பார்த்து எனக்கு பெருமையாக இருக்கிறது. அசுர வளர்ச்சி... அழகான வளர்ச்சி... இப்போது இயக்குநராகவும் நன்றாக வளர்ந்து இருக்கிறார்.’ என்று பேசினார்.

தனுஷ் பேசியவற்றையும் பார்க்கலாம்

அந்த விழாவில் பேசிய தனுஷ், "முதல் படத்தில் நடிக்கும் பொழுது, சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவே வில்லை. அவ்வளவு கிண்டல்கள்.. கேலிகள்... அவமானங்கள், துரோகங்களை தாண்டி இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் கரவொலி தான் காரணம்.

எப்படி கனெக்ட் செய்தீர்கள்?

ஒல்லியாக ... கருப்பாக... இருந்த என்னிடம், எப்படி நீங்கள் கனெக்ட் ஆனீர்கள் என்று தெரியவில்லை.. இங்கிலீஷ் ஒழுங்காக பேச தெரியாத என்னை, இங்கிலீஷ் படத்திலேயே நடிக்க வைத்தீர்கள். இந்த படத்தின் கதையை படத்தின் தயாரிப்பாளரர் கலாநிதி மாறனிடம் நசொன்ன போது, அவரிடம் எந்த ஒரு இடத்திலும், எந்தவித ரியாக்ஷனுமே இல்லை. அவர் அப்படி இருந்தது, ஒருவேளை நம்முடைய கதை நன்றாக இல்லையோ என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துவிட்டது. ஆனால் கதையை சொல்லி முடித்த பின்னர், அவர் இந்த படத்தை நாம் செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.

பிரகாஷ்ராஜின் பெரிய மனது

அவ்வளவு படங்கள், அவ்வளவு விருதுகள், பாராட்டுகள் அனைத்தையும் பார்த்த பின்னர் கூட, இப்போதும் அவர் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும்,முயற்சி செய்கிறார். அவரால் எப்படி அப்படி இவ்வளவு காலமும் இருக்க முடிகிறது என்பதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

பிரகாஷ்ராஜ் சார்... திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் அவருடன் நடிக்கும் பொழுது, அவரைப் பார்த்து பயந்து ஓரமாக நான் நின்று கொண்டிருப்பேன். இந்தப் படத்திற்காக முன்னதாக அவரிடம் பேசிய பொழுது, நான் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அவர் எப்போது வர வேண்டும் என்று சொல் என்று கூறினார்.

ஏ ஆர் ரஹ்மான் சாரிடம் போனில், சார் இது என்னுடைய ஐம்பதாவது படம். இந்த படத்தில் உங்களுடைய பெயர் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினேன். அவர் இரண்டு நாட்கள் கழித்து பதில் சொல்வதாகச் சொன்னார். அதேபோல இரண்டு நாட்களுக்கு கழித்து, அவரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அவர், தனுஷ் நான் இப்போது 30 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் இந்த படத்திற்கு யெஸ் சொல்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. ஆனால் நான் எஸ் என்று சொல்கிறேன் என்று கூறினார் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் கதை பற்றி பேசும் பொழுது, அதெல்லாம் தேவையே இல்லை. எப்போது வர வேண்டும் என்று சொல். நான் அப்போது வருகிறேன் என்று கூறினார். அப்படித்தான் அவர் இந்த படத்திற்கு வந்தார். அவருக்கு தற்போது கண் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. 30 நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார். இதை அவர் என்னிடம் சொன்னார். இதையடுத்து நான் அவரை நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேன்.ஆனால் அவர் அதையும் மீறி எங்களுக்காக இங்கே வந்திருக்கிறார்.

செதுக்கியவர் செல்வாதான்

பிரபுதேவா சாரை பொறுத்த வரை, அவருக்கு நான் அவரை இங்கு கூப்பிட்டாலும் பிடிக்காது. அவருக்கு நன்றி சொன்னாலும் பிடிக்காது. அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல..

ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என்னுடைய அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன்.அவர்தான் என்னுடைய ஆசான். அவர்தான் என்னுடைய குரு. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது அவர்தான். சாப்பிட சொல்லி கொடுத்தது அவர்தான். வாழ்க்கையில் போராட சொல்லிக் கொடுத்தது அவர்தான். கண்ணம்மாபேட்டையில் ஒரு குடிசை வீட்டில் இருந்த என்னை இன்று போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் அவர்தான்.

இந்த படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுக்கு இரண்டாவது டேக் சென்றால் நான் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு இரண்டாவது டேக் சென்றால், நான் சந்தோஷப்படுவேன். காரணம், அவர் என்னை அவரது படங்களில் அவ்வளவு டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறார். அதே டார்ச்சரை நான் அவருக்கு கொடுப்பதும், அதில் அவர் கஷ்டப்படுவதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது’ என்று பேசினார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.