“சோகத்தில் பெரிய சோகம் புத்திரசோகம்.. “அவன இழந்ததுதான் என் வாழ்க்கையிலேயே எனக்கு ஏற்பட்ட” - மகன் குறித்து பிரகாஷ்ராஜ்
மகனை இழந்ததுதான் என் வாழ்க்கையிலேயே எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்துன்பம் என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பேசி இருக்கிறார்.
பான் இந்தியா நடிகரான பிரகாஷ்ராஜ், அண்மையில் தன்னுடைய மகன் சித்தார்த்தின் இழப்பு தனக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார்.
நானும் மனிதன்தான்.
இது குறித்து அவர் பேசும் போது, “வலி என்பது மிகவும் பர்சலான விஷயம். அது என்னுடைய நண்பர் கெளரி லங்கேஷின் இறப்பாகட்டும் அல்லது என்னுடைய மகன் சித்தார்த்தின் இழப்பாகட்டும்.. இருப்பினும், என்னுடைய மகள்கள், குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் என்னால் சுயநலமாக இருக்க முடியாது.
நானும் மனிதன்தான். என்னையும் அது தொந்தரவு செய்யும். என்னையும் அது துன்புறுத்தும். மகனை இழந்த போது உதவியற்றவனாக உணர்ந்தேன். ஆனாலும், நான் வாழ்வதற்கான காரணங்களை கண்டுபிடித்துதானே ஆக வேண்டும். மரணம் என்பது, எப்போதும் இறுதியில் இருக்கிறது.” என்று பேசினார்.
முன்னதாக மகன் இழப்பு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய பிரகாஷ்ராஜ், “ அவனுக்கு 5 வயதாக இருந்த போது அந்த கொடிய சம்பவம் நடந்தது. சில மாதங்களாக உடல்குறைவால் பாதிக்கப்பட்ட அவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்தான். என் வாழ்க்கையில் நான் சந்தித்த துன்பங்களிலேயே பெரிய துன்பம் அவனை இழந்ததுதான்.” என்று பேசினார்.
லலிதா குமாரி - பிரகாஷ்ராஜ் தம்பதிக்கு மேக்னா, பூஜா, சித்தார்த் ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தன. சித்தார்த் இறந்த பிறகு அவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. இதனையடுத்து இருவரும் கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதனைதொடர்ந்து பிரகாஷ்ராஜ் தன்னுடைய 45 வயதில் போனி வர்மாவை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறான்.
முன்னதாக, பிரகாஷ் ராஜ் - லலிதா உறவு எப்படி முறிந்து போனது என்பது குறித்து முன்னதாக ஜெயந்தி கண்ணப்பன் தனியார் யூடியூப் சேனலுக்கு ஒன்றிற்கு சில மாதங்களுக்கு முன்னதாக பேசி இருந்தார்.
அதில் அவர் பேசும் போது, “ லலிதாவின் அக்காதான் டிஸ்கோ சாந்தி. வெளி இடங்களிலிருந்து இங்கு நடிக்க வருபவர்களுக்கு டிஸ்கோ சாந்தியின் வீடு ஒரு அடைக்கலமாக இருந்தது. அந்த வழியில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இவர் டிஸ்கோ சாந்தியின் சகோதரியை லலிதாவை பார்க்க நேருகிறது. இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு அவர்களது திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் பிறந்தன. ஒரு மகன், இரண்டு மகள்கள் சந்தோஷமான இல்லற வாழ்க்கை என அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருந்தது.
கட்டமைப்பானது உடைந்து விடும்.
சினிமா உலகை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே. யாராவது உங்களது வாழ்க்கையில் புதிதாக வரும் பொழுது, ஏற்கனவே இருந்த அந்த கட்டமைப்பானது உடைந்து விடும். ஆண் மகன்கள் வெளியே செல்கிறார்கள். நிறைய பேரை பார்க்கிறார்கள். யாராவது ஒருவரிடம் தங்களது மனதை பறி கொடுத்து விடுகிறார்கள்.
அப்படித்தான் பிரகாஷ்ராஜும் தன்னுடைய மனதை வெளியே பறி கொடுத்தார். இதனையடுத்து லலிதாவும் அவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். அந்த சூழ்நிலையில்தான் பிரபுதேவா ரமலத் ஆகியோரின் பிரிவும் நடந்தது. அவர்கள் இரண்டு பேரும் கார் ஓட்டிக்கொண்டு வரும் போது, இவ்வளவு பெரிய காரை அழகாக ஓட்டும் நீங்கள், உங்களுடைய கணவர்களை உங்களுடன் ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியவில்லையே என்று கேட்டேன்.
சிக்கலான விஷயம்
இதில் ஒரு சிக்கலான விஷயம் என்னவென்றால், இப்படி கணவன் விட்டுச் செல்லும் பொழுது, கையில் வேலை இருக்கும் பெண்ணோ அல்லது அரசு பணியில் இருக்கும் பெண்ணோ வாழ்க்கையை எப்படியாவது கடத்தி விடுவார்கள்.
ஆனால் இது போன்ற பெண்கள் அடுத்ததாக என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியே. காரணம் இவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. பிரபுதேவாவிற்கு எப்படி அவரின் மூத்த மகன் தவறினாரோ, அதேபோல பிரகாஷ்ராஜுக்கும் அவருடைய மூத்த மகன் தவறிவிட்டார்.
பிரகாஷ்ராஜ் விவாகரத்து முடிவை எடுத்த போது, லலிதா; என்ன இருந்தாலும் பிரகாஷ்ராஜ் எனக்கு கணவர். என்னுடைய மூன்று குழந்தைகளுக்கு தந்தை. அவர் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நான் சம்மதிக்கிறேன்.
அவரை மேற்கொண்டு எந்த காரணத்தைக் கொண்டும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொன்னார். பிரகாஷ்ராஜ் லலிதாவை பிரிந்தால் கூட, லலிதாவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தற்போது அவரை செய்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைத்து இப்போது வரை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு முறை திருமண வீட்டில் நான் பிரகாஷ் ராஜை சந்தித்த பொழுது, அவர் என்னிடம், லலிதாவின் மனதிற்கு அவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருப்பாள்” என்று சொன்னார்
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்