தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pragathi Guruprasad: ‘எது எப்படி நடக்கணுமோ அது அப்படித்தான்’ - பாலா படத்தில் நடிக்காதது ஏன்? - உண்மையை உடைத்த பிரகதி!

Pragathi Guruprasad: ‘எது எப்படி நடக்கணுமோ அது அப்படித்தான்’ - பாலா படத்தில் நடிக்காதது ஏன்? - உண்மையை உடைத்த பிரகதி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 10, 2024 04:00 PM IST

பாடுவது என்றால் நான் மிகவும் தன்னம்பிக்கையோடு பாடி விடுவேன்; ஆனால் நடிப்பதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இவர்களெல்லாம் என்னை எந்த நம்பிக்கையில் இப்படி நடிக்க கூப்பிடுகிறார்கள் என்பதில் எனக்கே சந்தேகம் இருந்தது.

பிரகதி பேட்டி!
பிரகதி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

பாலா படம் கைவிடப்பட்டது ஏன்? - காரணம் சொல்லும் பிரகதி!

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ பாலா சார் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தார். என்னை பார்த்த அவர், என்னிடம் நடிப்பதற்கான தகுதியும், உடல்வாகுவும் இருப்பதாகச் சொன்னார் அத்தோடு மட்டுமில்லாமல், அப்படி நீ நடிப்பதாக இருந்தால், என்னுடைய படத்தில்தான் முதலில் நடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்துதான் நான் பாலா சார் படத்தில் கமிட் செய்யப்பட்டேன். 

உண்மையைச் சொல்கிறேன்

ஆனால், அந்த படம் தாரை தப்பட்டை படம் கிடையாது. அந்த படம் வெறொரு படம். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்கவில்லை. உண்மையாக சொல்லப்போனால், அந்த சீசனை முடித்த பிறகு எனக்கு பாடுவதற்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. கூடவே அதைவிட அதிகமாக நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்தன. 

பாடுவது என்றால் நான் மிகவும் தன்னம்பிக்கையோடு பாடி விடுவேன்; ஆனால் நடிப்பதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இவர்களெல்லாம் என்னை எந்த நம்பிக்கையில் இப்படி நடிக்க கூப்பிடுகிறார்கள் என்பதில் எனக்கே சந்தேகம் இருந்தது. 

பாலா சார் படத்தில் நான் கமிட்டாகி இருக்கிறேன் என்ற அறிவிப்பும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப்படம் கைவிடப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்று என்னை கேட்டால், உண்மையில் எனக்கு தெரியாது. 

எப்படி நடக்க வேண்டுமோ அப்படித்தான் நடக்கும்

நிறைய விஷயங்கள் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டுமோ அப்படித்தான் நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதன் பின்னர் தான் இந்த நடிப்பை நான் கொஞ்சம் உற்றுநோக்கி கவனிக்க ஆரம்பித்தேன். 

இவ்வளவு பேர் நம்மிடம் நடிக்க கேட்கிறார்கள் என்றால்,  நம்மிடம் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். பாலா சார் படம் கை கொடுக்காத காரணத்தினால், மீண்டும் நான் வெளிநாட்டிற்கு சென்று அங்கு கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். 

அந்த சமயத்தில் ஹாலிவுட்டில் இருந்து எனக்கு இரண்டு மூன்று ஆஃபர்கள் நடிப்பதற்காக வந்தன. இதனையடுத்து தான் நான் அங்கு நடிப்பதற்கான பள்ளியில் சேர்ந்து அதனை கற்க ஆரம்பித்தேன்.  

அதன் பின்னர் அங்கு சில சீரியஸ்களில் நடித்தேன். தற்போது ஒரு பெரிய படத்தில் கமிட்டாகி இருக்கிறேன். இப்போது எனக்கு என் நடிப்பில் தன்னம்பிக்கை வந்திருக்கிறது. என்னாலும் திரையில் நன்றாக நடிக்க முடியும் என்ற தோன்றுகிறது” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்