Love Today: 3 வருட கனவு…லவ் டுடே குறித்து பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் தனது 3 வருட கனவு என கூறியுள்ளார்.
கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் லவ் டுடே. படத்தை இயக்கி உள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்த படம் வெளியாகி உள்ளது.
'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார்.
இந்நிலையில் லவ் டுடே படம் இன்று வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “லவ் டுடே 3 வருட கனவு. இரண்டாவது 'முதல் படம்' செய்ய தேர்வு செய்தேன். இந்த பயணத்தில் நான் பல உணர்ச்சிகளைக் கடந்து வந்திருக்கிறேன். அது மறக்க முடியாத ஒன்றாக அமைகிறது.
இன்று ரிலீஸானது. பயணம் முடிவடைந்தது. புதியது தொடங்க போகிறது என்பதை உணர்ந்தது எனக்கு கலவையான உணர்வுகளைத் தருகிறது.
என்னை நேசிப்பவர்கள் மற்றும் விரும்பாத அனைவரையும் நான் நேசிக்கிறேன். இன்றைய லவ் டுடே என்னுடையது அல்ல, உங்களுடையது.
நான் அதை உங்களுக்காக செய்தேன். நன்றி ஏஜிஎஸ், கல்பாத்தி எஸ். அகோரம், நீங்கள் இல்லாமல் எதுவும் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.
டாபிக்ஸ்