Bigg Boss 7 Tamil: பிரதீப் குறித்த கேள்வி.. வாய்யை கொடுத்து மாட்டி கொண்ட பூர்ணிமா!
பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பிறகு ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உள்ளார்.
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிரதீப், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, சகபோட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, கமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காரணம், இந்த விவகாரத்தில் மற்றவர்களின் கருத்தை கேட்ட கமல், பிரதீப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை. இதனையடுத்து வெளியே வந்த பிரதீப்பிற்கு மக்கள் ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
கமல் ஹாசன், பிறந்தநாள் அன்று கமலுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன பிரதீப், தீர விசாரிப்பதே மெய் என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதீப் ரெட் கார்டு விஷயத்திற்கு மாயா, பூர்ணிமா தான் காரணம் என ரசிகர்கள் கூறினர். மேலும் பிரதீப் ரெட் கார்டு வாங்கி சென்ற போது கூட அவர்கள் இருவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். இவை அனைத்தும் மாயா, பூர்ணிமா மேல் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா 16 லட்சம் ரூபாய்யுடன் வெளியேறி சென்று இருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியானது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பிறகு ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உள்ளார்.
அப்போது அவரிடம் பிரதீப் ஆண்டனி தொடர்பாகவும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பூர்ணிமா, இதை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நேரம் வரும் போது எல்லாருக்கும் எல்லாமே தெரிய வரும் “ என பதிலளித்தார்.
இதை கேட்ட பிரதீப் ரசிகர்கள், அது எப்படி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற பதில் சொல்லாம் என கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ இவர் வெளியே வந்தும் தான் செய்ததை தவறு என உணரவில்லை என சாடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.