Ponniyin Selvan Saree: தீபாவளி ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் சேலைகள் அறிமுகம்!
தீபாவளி ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரங்கள் உருவம் பதித்த சேலைகள் சந்தையில் விற்பனைக்காக களமிறக்கப்பட்டுள்ளன. பட்டு சேலையான இந்த பொன்னியின் செல்வன் சேலைகள் பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

பிரமாண்டமாக படைப்பாக உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் சூப்பர்ஹிட்டாக வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.
இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் வெளியாகி ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடியை வசூலித்துள்ளது. படத்துக்கான வரவேற்ப்பு சிறப்பாக இருப்பதால் ரூ. 600 கோடிக்கும் மேல் படம் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால் இன்று (அக்டோபர் 7) வெளியிடுவதாக திட்டமிட்டிருந்த படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தின் கதை, காட்சியமைப்பு, வசனங்கள், பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக படத்தின் கதாநாயகிகளாக தோன்றும் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் காஸ்ட்யூம், நகைகள் ஆகியவை கவரும் விதமாக இருப்பதாக பெண் ரசிகர்கள் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.