Ponniyin selvan: வந்தியத்தேவன் கேரக்டர் தவறாக சித்தரிக்கபட்டுள்ளதாக புகார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ponniyin Selvan: வந்தியத்தேவன் கேரக்டர் தவறாக சித்தரிக்கபட்டுள்ளதாக புகார்

Ponniyin selvan: வந்தியத்தேவன் கேரக்டர் தவறாக சித்தரிக்கபட்டுள்ளதாக புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 02, 2022 01:38 AM IST

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக தோன்றும் கார்த்தியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் மணிரத்னம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

<p>பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி</p>
<p>பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி</p>

இதையடுத்து படத்தில் ஆதித்த கரிகால சோழனின் நண்பனாகவும், தளபதியாகவும் தோன்றும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறியும், இந்த விவகாரத்தி பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், "பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை பொய்மைபடுத்தியும், திரித்தும் கூறி படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக சில காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் காதல் மன்னன் போல் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மனதில் தவறான எண்ண அலைகளை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருக்கும் சோழபேரரசின் உண்மையான வரலாற்றை மறைத்து தவறு இழைத்துள்ளதார்.

இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.