சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ராமதாஸ் வீட்டு வாரிசு! இந்த இயக்குனர் படத்திலா?
பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்தி சங்கமித்ரா தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான தலைவர் ஆவார். இவரது மகன் அன்புமணி ராமதாசும் அரசியலில் பணியாற்றி வருகிறார். தற்போது ராஜ்ய சபா எம்பியாகவும் பதவி வகித்துய வருகிறார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வரும் அன்புமணி ஒரு மருத்துவர் ஆவார். தருமபுரி, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பாமக கட்சி ஒரு வலிமை மிகு கட்சியாக இருந்து வருகிறது.
தேர்தலில் பிரச்சாரம்
அன்புமணி ராமதாஸுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். அன்புமணி ராமதாசின் மகள்கள் சங்கமித்ரா அவரது அம்மா சௌமியாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் இவரது பிரச்சார வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவரது அம்மா அந்த தொகுதியில் வெற்றி பெறாவிட்டாலும் இவரது பிரச்சார பேச்சுக்களால் அதிகம் கவனிக்கபட்டார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.
அலங்கு படத்தின் தயாரிப்பாளர்
இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் அலங்கு என்ற படத்தின் தயாரிப்பாளாராக சங்கமித்ரா பணியாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கமித்ரா தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.