Drug trafficking: போதை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், நடிகருக்கு போலீசார் வலை
போதைப்பொருள் கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் உள்பட மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் கடத்தும் கும்பலை பிடிக்க நாடு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். போதை பொருள் கடத்தல் தொடர்பாக கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து டெல்லியில் 50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போதை தடுப்பு பிரிவான என்சிபியினரால் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உணவு பொருள்கள் என்று கூறி இந்த போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருந்தாககவும் தெரிவித்தனர். அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தான் இந்த கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
மொத்தம் 50 கிலோ எடையுடன் கூடிய போதை பொருளுடன் சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதை கடத்தலில் தேடப்படும் முக்கிய நபராக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரை பிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகியுமான ஜாபர் சாதிக், இறைவன் மிகப் பெரியவன் பட நாயகன் மைதீன், சலீம் என 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்