Pithamagan VA Durai: பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! அவருக்கு வயது 59
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pithamagan Va Durai: பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! அவருக்கு வயது 59

Pithamagan VA Durai: பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! அவருக்கு வயது 59

Kalyani Pandiyan S HT Tamil
Oct 03, 2023 06:57 AM IST

பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்.

பிதாமகன் தயாரிப்பாளர் மரணம்!
பிதாமகன் தயாரிப்பாளர் மரணம்!

தயாரிப்பாளராக பல்வேறு திரைப்படங்களை தயாரித்த இவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தார். இதனிடையே, நிதி நெருக்கடி காரணமாக தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி வீடியோ வழியாக கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து அவருக்கு சூர்யா உட்பட பல பிரபலங்கள் உதவினர். மருத்துவமனையிலும், தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டிலும்,  அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். வி.ஏ.துரைக்கு நீரிழிவு நோய் காரணமாக ஒரு காலானது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணாகி விட்டது. இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினராகவும், ஆயுட் கால உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.