Pandiyan Stores: ஆதார் கார்டால் சிக்கப் போகும் தங்கமயில்.. டார்ச்சரால் நழுவும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்!-peoples expect pandiyan stores 2 thangamayil will cough asap - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pandiyan Stores: ஆதார் கார்டால் சிக்கப் போகும் தங்கமயில்.. டார்ச்சரால் நழுவும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்!

Pandiyan Stores: ஆதார் கார்டால் சிக்கப் போகும் தங்கமயில்.. டார்ச்சரால் நழுவும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்!

Malavica Natarajan HT Tamil
Oct 02, 2024 08:34 PM IST

Pandiyan Stores: பொய் சொல்லி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கல்யாணம் செய்துவந்த தங்கமயில் சிக்குவாரா? மாட்டாரா? என்ற பரபரப்பு நாளுக்கு நாள் சீரியல் பார்க்கும் ரசிகர்களிடம் அதிகரிகத்துக் கொண்டே இருக்கிறது.

Pandiyan Stores: ஆதார் கார்டால் சிக்கப் போகும் தங்கமயில்.. டார்ச்சரால் நழுவும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்!
Pandiyan Stores: ஆதார் கார்டால் சிக்கப் போகும் தங்கமயில்.. டார்ச்சரால் நழுவும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்!

மீண்டும் வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

இது ரசிகர்களிடையே அதிக பேசுபொருளான நிலையில், தற்போது, தந்தை- மகன் பாசத்தை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனும் தொடர் வெளியாகிவருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் மக்களுக்கு சலிப்பைத் தந்தாலும், பாண்டியனின் ஒவ்வொரு மகனுக்கும் திருமணம் ஆகத் தொடங்கியதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

நண்பர்கள் மூன்று பேர் ஒரு இடத்தில் இருந்தாலே, இருவர் ஒன்றாக சேர்ந்து மீதமுள்ள நபரை தாக்கி அடாவடி செய்வர். இங்கு ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால் என்ன நடக்கும். அதிலும், அவர்களுக்கு மாமியார் பக்கபலமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சுவாரசியமாக சொல்லி வருகிறது இந்த நாடகம்.

மகன்களின் திருமணம்

பாண்டியனின் முதல் மகனுக்கு திருமணமாவதற்கு முன்பே மீதமுள்ள இரண்டு மகன்களும் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களை திருமணம் செய்துகொண்டு வந்த மீனாவும் ராஜியும் உடன்பிறவா சகோதரிகள் போலவும் நண்பர்கள் போலவும் பக்க பலமாக இருந்து வருகின்றனர். ஆனால், மற்ற மகன்களை விட மூத்த மகன்மேல் அதிக பாசம் வைத்துள்ள பாண்டியன் பார்த்து பார்த்து தங்கமயிலை என்பவரை திருமணம் செய்து வைக்கிறார்.

ஆனால், தங்கமயிலின் குடும்பமோ அவரின் வயது, கல்யாணத்திற்காக போட்ட நகைகள் என பலவற்றில் பொய்யாக கூறியதுடன், தங்கமயிலை தூண்டிவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பல குழப்பத்தை உருவாக்கி வருகிறது.

சந்தேகத்தில் மீனா

இந்த நிலையில், ஆரம்பத்திலிருந்தே தங்கமயில் மீது சந்தேகப்படும் மீனாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல் சிக்கியுள்ளது தற்போது நடந்துள்ள திருமண பதிவு விஷயம். பாண்டியனின் மூத்த மகன் சரவணனுக்கும்- தங்கமயிலுக்கும் திருமணமானதை பதிவு செய்ய வேண்டும் என்ற பேச்சு வீட்டில் அடிபடுகிறது. 

இதற்காக தங்கமயிலின் ஆதார் அட்டையை கேட்கிறார் பாண்டியன். அவ்வளவு தான். தங்கமயிலுக்கு தொற்றிக் கொண்டது பயம், ஏனெனில் ஆதார் அட்டையை பார்த்தால் தான், சரவணனை விட வயதில் மூத்தவர் என்ற விவரம் அனைவருக்கும் தெரிந்துவிடும். அத்தோடு நில்லாமல், அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகும் என்பதால் ஆதார் அட்டை அம்மா வீட்டில் இருப்பதாக கூறி சமாளிக்கிறார்.

தவிக்கும் தங்கமயில்

பின் இதுகுறித்து அவரது அம்மாவிடம் பேசினால், அவர் இதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், அவரையே சமாளிக்க சொல்கிறார். இது மீனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், நமக்கு எதுக்கு வம்பு என விலகியே இருக்கிறார்.

நெருக்கடி தரும் ராஜி

அதேசமயம், தான் சுயமாக சம்பாதிக்க வேண்டும். அதற்காக டியூஷன் எடுக்க வேண்டும். அதற்கு பாண்டியனிடம் அனுமதி வாங்கித் தருமாரு தனது மாமியாரை நெருக்கடிக்குள் தள்ளுகிறார் ராஜி. இதையும் கவனித்த மீனா, ஏற்கனவே, இந்த வீட்டில் நம் தலை உருளுகிறது. எதற்கு வம்பு என நைஸாக விலகுகிறார்.

காத்திருக்கும் ரசிகர்கள்

இதையடுத்து வரும் நாட்களில், விரைவில் தங்கமயில் குடும்பத்தாரிடம் சிக்குவார் என ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், அந்த நாளுக்காகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.