Pechi OTT Release: காட்டில் ட்ரெக்கிங்.. தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள்! பேச்சி திகில் படம் ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்-pechi ott release date tamil horror film to stream on this platform - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pechi Ott Release: காட்டில் ட்ரெக்கிங்.. தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள்! பேச்சி திகில் படம் ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

Pechi OTT Release: காட்டில் ட்ரெக்கிங்.. தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள்! பேச்சி திகில் படம் ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 19, 2024 04:30 PM IST

Pechi OTT Release: நண்பர்கள் சேர்ந்து அடர்ந்த காட்டில் ட்ரெக்கிங், தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள் நிறைந்த கதையாக உருவாகியிருக்கும் பேச்சி என்ற திகில் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

Pechi OTT Release: காட்டில் ட்ரெக்கிங்.. தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள்! பேச்சி திகில் படம் ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்
Pechi OTT Release: காட்டில் ட்ரெக்கிங்.. தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள்! பேச்சி திகில் படம் ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

பேச்சி திரைப்படம்

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் பி இயக்கியிருக்கும் பேச்சி திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியானது. படத்தில் காயத்ரி, பால சரவணன் தவிர மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்களாகவே நடித்திருந்தனர். குறும்படம் ஒன்றின் கதையை அடிப்படையாக வைத்து திகில் கலந்த த்ரில்லர் பாணியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

பேச்சி கதை

நண்பர்கள் சிலர் சேர்ந்து வீக்கெண்ட் பயணமாக ட்ரெக்கிங் செல்ல முடிவெடுக்கிறார்கள். கொல்லிமலையில் இருக்கும் அரண்மனைகாடு என்ற பகுதிக்கு செல்லும் நண்பர்கள் சந்திக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளை சுற்றி படத்தின் கதை அமைந்துள்ளது.

அந்த பகுதியில் தடைசெய்யப்பட்ட கோட்டை ஒன்றை கடக்கும்போது, ​​அவர்களை வேட்டையாடத் தொடங்கும் தீய ஆவியை எதிர்கொள்கிறார்கள். அந்த தீய அமானுஷ்ய சக்தியிடமிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பரபர த்ரில்லர் காட்சிகளுடன் பேச்சி படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

படத்தின் தொழில்நுட்ப குழுவை பொறுத்தவரை ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். பார்த்திபன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஒரே இடத்தில் அதிரவைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன், விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை பேச்சி தந்திருப்பதாக படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகின. அத்துடன் திகில் பட ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையக்கூடும் எனவும் கூறப்பட்டது.

ஆஹா ஓடிடியில் பிற தமிழ் படங்கள்

இந்த ஆண்டில் வெளியான பல்வேறு சிறு பட்ஜெட் படங்கள் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி, அருண் விஜய் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வந்த மிஷன்: சேப்டர் 1, ஹாரர் த்ரில்லர் படமான டெவில், சந்தானம் நடித்த பீரியட் காமெடி படமான வடுகப்பட்டி ராமசாமி, க்ரைம் திரில்லர் படமான ரணம் அரம் தவறேல், ஹாட் ஸ்பாட், பூமர் அங்கிள், தி பாய்ஸ், வெப்பம் குளிர் மழை, விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ, குரங்கு பெடல், ஹரா, சரத்குமார் நடித்த ஹிட் லிஸ்ட், அர்ஜுன் தாஸ் நடித்த ரசாவதி போன்ற படங்களும் உள்ளன.

தமிழ் திகில் படங்கள் 2024

இந்த ஆண்டில் இதுவரை ஏராளமான திகில் படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. இதில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4, அஜயன் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படங்கள் தவிர பார்க், கார்டியன், 7ஜி, டெவில், படிக்காத பக்கங்கள், அரணம், பாம்பாட்டம், தி பாய்ஸ், 105 மினிட்ஸ் போன்ற திகில் படங்களும் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.