Namma Satham: சிம்பு பிறந்தநாளில் நம்ம சத்தம் வருகிறது
பத்து தல படத்தின் முதல் சிங்கள் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

நம்ம சத்தம்
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தின் முதல சிங்கள் பாடல் குறித்த அப்டேட் இன்று ( ஜனவரி 31 ) வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
அதன் படி படத்தின் முதல் சிங்கள் குறித்த அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். நம்ம சத்தம் என பெயரிடப்பட்டுள்ள முதல் பாடல் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, பாடியுள்ளார். பாடலை விவேக் எழுத சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்து இருக்கிறார்.
