Paatti Sollai Thattathe: மனோரமாவின் கலக்கல் நடிப்பு..! சில்வர் ஜூப்ளி வெற்றியை பெற்ற காமெடி படம்
மனோரமாவின் கலக்கல் நடிப்பு, சில்வர் ஜூப்ளி வெற்றியை பெற்ற காமெடி படம் ஆக இருக்கும் பாட்டி சொல்லை தட்டாதே படத்தை, பிளாப் ஆன தனது பழைய பட கதையை பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் உருவாக்கி வெற்றி கண்டார் தயாரிப்பாளர் எம். சரவணன். படத்தில் இடம்பிடித்த சூப்பர் கார் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சில்வர் ஜூப்ளி வெற்றியை பெற்ற காமெடி படம் பாட்டி சொல்லை தட்டாதே
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக இருக்கும் படம் பாட்டி சொல்லை தட்டாதே. சித்ராலையா கோபு எழுத்தில், ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் பாண்டியராஜன், ஊர்வசி ஆகியோர் ஜோடியாக நடித்திருப்பார்கள். மனோரமா படத்தின் முக்கிய கேரக்டரில், டைட்டிலை குறிக்கும் விதமாக அமைந்திருக்கும் பாட்டி வேடத்தில் நடித்திருப்பார்.
சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, கோவை சரளா, எஸ்எஸ் சந்திரன், ஒய்ஜி மகேந்திரன், செந்தில், ஆனந்தராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.
பாட்டி பேரன் பாசம்
பணக்கார பாட்டியாக வரும் மனோரமா, பேரன் பாண்டியராஜன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பார். எதிர்பாராத சந்தரப்ப சூழ்நிலையால் ஊர்வசியை சந்திக்கும் பாண்டியராஜன் அவரை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.