Oscars 2024 குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
Oscars 2024: ஆஸ்கர் விழா மார்ச் 10 அன்று நேரடியாக ஒளிபரப்பப்படும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து இங்கே.
எம்மிஸ், கோல்டன் குளோப்ஸ், கிராமி விருதுகள் நிகழ்வுகள் முடிந்த நிலையில், மிகப் பெரிய விருதுகள் விழாவான அகாடமி விருதுகள் அடுத்து வரவுள்ளன. 96 வது ஆஸ்கர் விருதுகள் ஓப்பன்ஹைமருக்கு படத்துக்கு பல விருதுகளை வாரி வழங்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படம் 13 பரிந்துரைகளுடன் ரேஸில் உள்ளது, இருப்பினும் பார்பி, கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் மற்றும் புவர் திங்ஸ் உள்ளிட்ட பிற படங்கள் ஆஸ்கர் ரேஸில் உள்ளன.
இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
ஆஸ்கார் விருதுகள் எப்போது?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாகிழக்கு நேர மண்டலம் படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது - வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக - மற்றும் ஏபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மாலை 6:30 மணிக்கு ஒரு ப்ரீஷோ தொடங்கும்.
ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பது யார்?
கடந்த ஆண்டின் பெரிய நடிப்பு வெற்றியாளர்கள் அனைவரும் மீண்டும் வருகிறார்கள், இதில் பிரெண்டன் ஃப்ரேசர், மைக்கேல் யோஹ், கே ஹூய் குவான் மற்றும் ஜேமி லீ கர்டிஸ் ஆகியோர் அடங்குவர். ஸ்கார்ஃபேஸ் இணை நட்சத்திரங்களான மைக்கேல் ஃபைஃபர் மற்றும் அல் பசினோ ஆகியோரும் விருதுகளை வழங்கத் தயாராக உள்ளனர் என்றும் அகாடமி அறிவித்தது. டால்பி மேடையை அலங்கரிக்கும் மற்ற பிரபலங்களில் ஜெண்டயா, மேத்யூ மெக்கோனாஹே, ஜெசிகா லாங்கே, நிக்கோலஸ் கேஜ், மஹெர்ஷாலா அலி, சாம் ராக்வெல் மற்றும் லுப்டியா நியோங்கோ ஆகியோர் அடங்குவர். நிகழ்ச்சி நாள் நெருங்கும்போது மேலும் பெயர்கள் வெளியிடப்படும்.
ஆஸ்கர் விருதுகள் ஒளிபரப்பப்படுகிறதா?
இந்த நிகழ்ச்சி கேபிள் சந்தாவுடன் ABC.com மற்றும் ஏபிசி செயலி வழியாக ஸ்ட்ரீம் செய்ய கிடைக்கும். Hulu Live TV, YouTubeTV, AT&T TV மற்றும் FuboTV உள்ளிட்டவை மூலமாகவும் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவில் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.
ஆஸ்கர் விருதுகளை தொகுத்து வழங்குவது யார்?
கடந்த ஆண்டு விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக பங்கேற்கிறார். நான்கு முறை ஹூப்பி கோல்ட்பெர்க் மற்றும் ஜாக் லெம்மன் ஆகியோர் ஏற்கனவே தொகுத்து வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் இவரும் இணைகிறார். இதுகுறித்து கிம்மல் கூறுகையில், “ஆஸ்கர் விருது விழாவை சரியாக நான்கு முறை தொகுத்து வழங்க வேண்டும் என்பது எனது கனவு” என்றார்.
2024 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது எது?
சிறந்த படத்துக்கான 10 பரிந்துரைகள்: American Fiction; Anatomy of a Fall; Barbie, The Holdovers; Killers of the Flower Moon; Maestro; Oppenheimer; Past Lives; Poor Things; and The Zone of Interest.
FAVORITES யார்?
கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர் முன்னணியில் உள்ளது. சிறந்த இயக்குனர் ரேஸில் நோலனும் உள்ளார். சிறந்த நடிகை பிரிவில் லில்லி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்) மற்றும் எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்) ஆகியோருக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கலாம். கிளாட்ஸ்டோன் வெற்றி பெற்றால், ஆஸ்கர் விருதை வென்ற முதல் பூர்வீக அமெரிக்கராக இருப்பார். சிறந்த நடிகருக்கான போட்டியில் சிலியன் மர்பி (ஓப்பன்ஹைமர்) மற்றும் பால் கியாமட்டி (தி ஹோல்டோவர்ஸ்) ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் முதல் முறையாக வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த துணை நடிகைக்கான விருதை கியாமாட்டியின் இணை நடிகர் டா'வைன் ஜாய் ராண்டால்ஃப் பெறுவார் என்றும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்) பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்