KARTHIK : ‘எல்லாம் நாசமா போற அந்த பழக்கத்தால..’ அத்துமீறிய கார்த்திக்.. டென்ஷனான அப்பா! - பாலாஜி பிரபு!-oscar movies balaji prabhu latest interview about karthik worst behavior in producer m bhaskar chakravarthy movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthik : ‘எல்லாம் நாசமா போற அந்த பழக்கத்தால..’ அத்துமீறிய கார்த்திக்.. டென்ஷனான அப்பா! - பாலாஜி பிரபு!

KARTHIK : ‘எல்லாம் நாசமா போற அந்த பழக்கத்தால..’ அத்துமீறிய கார்த்திக்.. டென்ஷனான அப்பா! - பாலாஜி பிரபு!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 24, 2024 07:59 AM IST

Karthik: அந்தப் படத்தில் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுக்கும் பொழுது அவர் கொடுத்த தேதிகளின்படி ஒழுங்காக வராமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதில் அப்பா மிகவும் டென்ஷனாகி விட்டார்.- பாலாஜி பிரபு!

Karthik: ‘எல்லாம் அந்த நாசமா போற அந்த பழக்கத்தால..’ அத்துமீறிய கார்த்திக்.. டென்ஷனான அப்பா! - பாலாஜி பிரபு!
Karthik: ‘எல்லாம் அந்த நாசமா போற அந்த பழக்கத்தால..’ அத்துமீறிய கார்த்திக்.. டென்ஷனான அப்பா! - பாலாஜி பிரபு!

ஓடி ஒளிந்து கொண்ட கார்த்திக்

இது குறித்து அவர் பேசும் போது, “ கார்த்திக் சில தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார். அதனால், அவரால் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை. வருஷம் 16 படம் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுதான், சட்டத்தின் திறப்பு விழா படத்திற்கான தேதிகளை கொடுத்தார் கார்த்திக். ஆனால், அந்தப் படத்தில் எங்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. எங்களது அடுத்த படமான சக்கரவர்த்தி படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவரின் கிழக்கு வாசல் திரைப்படம் மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.

அந்தப் படத்தில் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுக்கும் பொழுது அவர் கொடுத்த தேதிகளின்படி ஒழுங்காக வராமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதில் அப்பா மிகவும் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து மற்றொரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த கார்த்திகை பார்ப்பதற்கு, அப்பா அடியாட்களுடன் சென்றார். இதை தெரிந்து கொண்ட கார்த்திக் ஓடி ஒளிந்து கொண்டார்.

இழுத்தடித்த கார்த்திக்

பொதுவாக கார்த்திக் சாரை பொருத்தவரை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரக்கூடாது என்று முடிவெடுத்து விட்டால், வேண்டுமென்றே மருத்துவமனைக்குச் சென்று பெட்டில் படித்துக் கொண்டு ட்ரிப் ஏற்றிக்கொள்வார். அதற்காக அவர் ஒரு சிறப்பு மருத்துவரையும் வைத்திருந்தார்.

 

அப்படி இருக்கும் பொழுது அவரை பார்க்கச் செல்லும் தயாரிப்பாளர்கள், எதுவும் சொல்ல முடியாமல் திரும்பி வந்து விடுவார்கள். அப்படியெல்லாம் தொல்லை கொடுத்தவர்தான் கார்த்திக். இந்த நிலையில் சக்கரவர்த்தி படத்தின் பொழுது, அவரை ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர வைக்க, அப்பாவின் நண்பர் ஒருவர் கார்த்திக் வீட்டிலேயே தங்கி இருந்து, அவரை தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வருவார். அவரது காரிலேயே மீண்டும் இருவரும் அவரது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

கடைசி நேரத்தில் பிரச்சினை கொடுத்த கார்த்திக்

அந்தப் படத்தில் இறுதியாக மூன்று நாட்கள் மட்டும் பாடல் ஒன்றை படம் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த பாடலில் பானுப்பிரியாவும், கார்த்திக்கும் இணைந்து டூயட் ஆடுவது போன்ற பாடல் அது. இந்த நிலையில், திடீரென்று இரவில் ஒரு மருத்துவரை வரவைத்து காலில் கட்டு போட்டுக்கொண்டார் கார்த்திக். காலையில் எழுந்து அப்பாவின் நண்பர் இதை பார்த்து, அப்பாவிடம் சொல்ல, அப்பா உடனடியாக கார்த்திக் வீட்டுக்கு வந்து விட்டார். என்ன ஆனது என்று கேட்க, பாத்ரூமில் வழுக்கு விழுந்து விட்டதாகவும், அதனால்தான் இப்படி கட்டுப்போட வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது என்று கார்த்திக் கூறினார். ஆனாலும் அப்பா கார்த்திக்கை விடவில்லை. கார்த்திக்கை பார்த்து, நீ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வா என்றார். இப்படி இருக்கையில் எப்படி வர முடியும் என்று கார்த்திக் கேட்க, நீ வா மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றார். இதையடுத்து அங்கு வந்திருந்த கார்த்திக்கை சும்மா நிற்க வைத்துவிட்டு, பானுப்ரியாவை மட்டும் நடனமாட வைத்து அந்த பாடலை எடுத்தோம். கார்த்திக் காலில் போட்டு இருக்கும் கட்டு தெரியாமல் இருப்பதற்காக, ஸ்மோக் எஃபெக்டை பயன்படுத்திக் கொண்டோம்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.