BHANUPRIYA: 10 நாட்களில் பஞ்சரான பானுப்பிரியா;சங்கத்திற்கு பறந்த கடிதம்;நார் நாராக கிழிந்த உண்மை! -வெளுத்த தயாரிப்பாளர்
Bhanupriya: பானுப்பிரியா எங்களுக்கு ஒரு பிரச்சினை கொடுத்தார். ஆம், 10 நாட்கள் படபிடிப்பு நடத்தியவர், திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர முடியாது என்று கூறினார். - வெளுத்த தயாரிப்பாளர்
சக்கரவர்த்தி திரைப்படத்தில் பானுப்பிரியா நடந்த கொண்ட மோசமான விதம் குறித்து பாலாஜி பிரபு பெட்டர் டு டே சேனலுக்கு அண்மையில் பேசி இருந்தார்.
பானுப்பிரியா கொடுத்த குடைச்சல்
இது குறித்து அவர் பேசும் போது, “சக்கரவர்த்தி திரைப்படத்தில் பானுப்பிரியாவிற்கு 5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. முன்பணமாக ஒரு லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. அதன்படி அவர் ஒரு 10 நாட்கள் வந்து நடித்தும் கொடுத்து விட்டார். இதற்கிடையே கார்த்திக் சாரின் தூண்டுதலின் பேரில், பானுப்பிரியா எங்களுக்கு ஒரு பிரச்சினை கொடுத்தார். ஆம், 10 நாட்கள் படபிடிப்பு நடத்தியவர், திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர முடியாது என்று கூறினார். இதையடுத்து அப்பா நேரில் சென்று என்ன பிரச்சினை என்று கேட்க, பானுப்பிரியா எனக்கு மொத்தமாக பேசி சம்பளத்தை கொடுத்தால்தான் நான் நடிக்க வருவேன் என்று கூறினார்.
அதற்கு அப்பா, அது வழக்கம் இல்லையே…முதல் ஷெட்யூல் முடிந்த பின்னர் உங்களுக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுத்து விட்டேன். டப்பிங் முடிந்த பின்னர் முழுமையாக பணத்தை கொடுத்து விடுவேன் என்று கூறினார். அதற்கு பானுப்பிரியா நீங்கள் எனக்கு முழு சம்பளத்தை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆகையால் எனக்கு முழு சம்பளத்தை கொடுங்கள் என்று கேட்டார். இதையடுத்து அப்பா பேங்கிற்கு சென்று 5 லட்சத்திற்கான டிடியை ஒன்றை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் இதுபோல் பானுப்பிரியா முழு சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்றும் என் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறுகிறார். ஆகையால் அவரின் சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்படைக்கிறேன்.
எனக்கு நம்பிக்கை இல்லை
காரணம் என்னவென்றால், என்னை நம்பாத அவர், முழு சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டார் என்றால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் இந்த டிடி உங்களிடமே இருக்கட்டும். அவர் படத்தை முடித்துக் கொடுத்த பின்னர், இந்த பணத்தை நீங்கள் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தரப்பிலிருந்து, பானுப்பிரியாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, பானு அப்பாவை சந்தித்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
மேலும் மொத்தமாக பணம் வேண்டாம். இந்த ஷெட்யூலுக்கான பணத்தை மட்டும் கொடுங்கள் என்று சொன்னார். ஆனால் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. நீங்கள் சொன்னபடியே நடந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். இதற்கிடையில் படத்தின் வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு, அந்த படம் இழுத்து அடித்துக்கொண்டே இருந்தது. பானுப்பிரியா படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து தனக்கான டிடியை கேட்டார் பானு. அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் இருந்து அப்பாவுக்கு போன் செய்து கொடுத்து விடலாமா என்று கேட்க, இல்லை சார் இப்போது கொடுக்க வேண்டாம் நான் மறுபடியும் ஏதாவது படம் எடுக்க வேண்டியது இருந்தால், அந்த அம்மா பிரச்சனை கொடுக்கும். அதனால் வேண்டாம் என்றார். ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம் சமரசம் பேசும் முன் வந்தது. ஆனால் அப்பா கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட அந்தப் படம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது வரை பானுப்பிரியாவிற்கு சம்பளம் செல்லவே இல்லை. கடைசியாக அந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னர் ஆவது பணத்தை கொடுக்கலாமா என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்க, இல்லை சார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவது போல இருக்கிறது. ஆனால் பணத்தை கொடுக்க வேண்டாம். முதற்காட்சி ஓடி முடித்த பின்னர் அந்த பணத்தை கொடுங்கள் என்று அப்பா மிகவும் ஸ்ரிக்டிக்காக சொல்லிவிட்டார். இதையடுத்து அந்த படத்தின் முதல் காட்சி ஓடி முடிந்த பின்னர் தான் அந்த முழு பணமும் பானுப்பிரியாவிற்கு கிடைத்தது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்