10 Years of Udhayam NH4: தனுஷுக்கு டிராப் ஆகி சித்தார்த்துக்கு கைகொடுத்த உதயம் என்எச் 4 - சுவாரஸ்ய பின்னணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Udhayam Nh4: தனுஷுக்கு டிராப் ஆகி சித்தார்த்துக்கு கைகொடுத்த உதயம் என்எச் 4 - சுவாரஸ்ய பின்னணி

10 Years of Udhayam NH4: தனுஷுக்கு டிராப் ஆகி சித்தார்த்துக்கு கைகொடுத்த உதயம் என்எச் 4 - சுவாரஸ்ய பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 19, 2023 06:50 AM IST

காதலை மையமாக வைத்து பெங்களூரு - சென்னை இடையிலான நிகழ்த்தப்படும் ரேஸ் என இரண்டு மணி நேரம் பரபரப்பும் சுவாரஸ்யமும் நிறைந்து இயக்குநர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் உருவான படம் உதயம் என்எச் 4. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் முதல் படமாக வரவேண்டிய இந்தப் படம் சித்தார்த் நடிப்பில் வெளியானது.

உதயம் என்எச் 4 படத்தின் ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி
உதயம் என்எச் 4 படத்தின் ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி

அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரமாக இருக்கும் பெங்களூரு, மாநிலத்தின் தென் எல்லை பகுதியில் அமைந்திருகிறது. இதன் அருகில் இருக்கும் தமிழ்நாட்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பெங்களூரு மீது பிணைப்பு என்பது படிப்பு, வேலை, தொழில் போன்ற பல்வேறு விஷயங்களில் இருந்து வருகிறது.

காவிரி ஆறு விவகாரத்தில் இந்த பிணைப்பு சர்ச்சையாக மாறி பின் சில காலத்துக்கு பிறகு அடங்குவதென்பது நீண்ட நாள்களாக தொடரும் விஷயமாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் பெங்களூரு கல்லூரியில் படிக்க வரும் தமிழ் பையனான சித்தார்துக்கும், அங்குள்ள அரசியல் பெரும்புள்ளியின் மகளாக வரும் அஷ்ரிதா ஷெட்டிக்கும் இடையே காதல் பற்றிக்கொள்கிறது. மைனராக இருக்கும் அர்ஷிதா ஷெட்டியை தந்தையிடமிருந்து காப்பாற்ற கடத்தல் நாடகம் செய்யும் சித்தார்த் மற்றும் நண்பர்கள், அவர்களுக்கும் போலீஸுக்கும் இடையிலான சேஸ் என படம் பரபரகாட்சிகளுடன் இடம்பிடித்து இறுதியில் சுபமான கிளைமாக்ஸுடன் முடியும்.

காதல், ஆக்‌ஷன் கலந்த ஒரு வழக்கமான கதையில் காதலுக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பில் தொடங்கி மகளின் காதல் விவகாரத்தால் பறிபோக இருக்கும் அரசியல் எதிர்காலத்தை காப்பாற்ற நினைக்கும் தந்தை என ஆங்காங்கே கர்நாடக மண்ணில் நிலவும் அரசியல் சர்ச்சைகளையும் தனது திரைக்கதையில் இணைத்திருப்பார் வெற்றிமாறன்.

சித்தார்தை ஒரு கேஷுவல் கம் கேரிங் நபராக காட்சி, அஷ்ரிதாவுக்கும் அவருக்கு இடையே காதல் மலரும் தருணங்களாக அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி காட்சிகள் அழுத்தமாக அமைந்திருப்பதோடு, ஹீரோ, ஹீரோயின் புரொபோஸ், ரொமாண்ஸ் என்று வழக்கமான க்ளேஸக்காளாக்களாக மிகவும் எதார்த்தமாக அமைந்திருக்கும்.

என்எச் 4இல் தப்பிக்கும் பரபர சேஸிங் காட்சிகள் ஒரு புறம், அப்போது பிளாஷ்பேக்காக பின்னணி காட்சிகள் என விரியும் திரைக்கதை என நான் லீணியர் பாணி திரைக்கதை பார்வையாளர்களை படம் செல்லும் இடங்களில் பயணிக்க வைத்தது.

ஜி.வி. பிரகாஷ் இசையில் யாரோ இவன் படம் வெளியான 2013ஆம் ஆண்டி டாப் பாடல்கள் லிஸ்டில் இடம்பிடித்தது என்றால், கானா பாலாவின் ஓரக்கண்ணாலே பாடல் பார்டிகளில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்றாக இருந்து வந்தது.

வழக்கமான காதல் கதையில் வழக்கமான பாணியில் இல்லாமல் கொஞ்சம் த்ரில்லர், பின்னணியில் கொஞ்சம் அரசியல் என கலந்து கட்டி 2 மணி நேரம் எண்டர்டெயின்ராக அமைந்த உதயம் என்எச் 4 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

இந்த படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த அது ஒரு கனாக்காலம் படத்தின் உதவியாளராக இருந்தபோதே வெற்றிமாறன் தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரில் சொன்ன கதை. இதில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டு பல தயாரிப்பாளர்கள் கை மாறி டிராப் ஆனது.

அதனால் இதை ஒதுக்கி வைத்துவிட்டு முதல் படமாக தனுஷை வைத்து பொல்லாதவன் எடுத்தார் வெற்றிமாறன். ஆடுகளம் வெற்றிக்கு பின் மீண்டும் விடா முயற்சியாக இந்தப் படத்தை கையில் எடுத்த வெற்றிமாறன் இந்த முறை தனது கதையை உதவி இயக்குநருக்கு அப்படியே தர, சித்தார்த், அறிமுக கதாநாயகி அஷ்ரிதா ஷெட்டி ஆகியோரின் நடிப்பில் வெற்றிகரமான தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம்ஸ் மூலம் தயாரித்து வெளியிட்டு வெற்றியும் கண்டார்.

இதுவொரு ட்ரெண்ட்செட்டர் படமாக இல்லாவிட்டாலும், அந்த ஆண்டில் வெளியாகி கவனத்தை ஈர்த்த படங்களில் ஒன்றாகவே இருந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.