இசைஞானி கண்டெடுத்த முத்து.. கமலுடன் நடிப்பு.. ரஜினியின் குரல்.. மனோகரக் குரலோன் மனோவிற்கு HBD!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இசைஞானி கண்டெடுத்த முத்து.. கமலுடன் நடிப்பு.. ரஜினியின் குரல்.. மனோகரக் குரலோன் மனோவிற்கு Hbd!

இசைஞானி கண்டெடுத்த முத்து.. கமலுடன் நடிப்பு.. ரஜினியின் குரல்.. மனோகரக் குரலோன் மனோவிற்கு HBD!

Malavica Natarajan HT Tamil
Oct 26, 2024 05:48 AM IST

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகரும், நடிகரும், டப்பிங் கலைஞரும், தயாரிப்பாளருமான மனோவிற்கு இன்று 59வது பிறந்தநாள்.

இசைஞானி கண்டெடுத்த முத்து.. கமலுடன் நடிப்பு.. ரஜினியின் குரல்.. மனோகரக் குரலோன் மனோவிற்கு HBD!
இசைஞானி கண்டெடுத்த முத்து.. கமலுடன் நடிப்பு.. ரஜினியின் குரல்.. மனோகரக் குரலோன் மனோவிற்கு HBD!

சினிமா என்ட்ரி

இதனால், குழந்தைப் பருவத்திலேயே கர்நாடக இசையையும், மேடை நாடகங்கள் மட்டுமின்றி, சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். பின், படிப்படியாக வளரும் சமயத்தில் தன் முழு கவனமும் இசை மேல் செல்ல ஆரம்பித்ததால், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராகவும், பிற்காலத்தில் இசையமைப்பாளர் சக்ரவர்த்தியிடம் ட்ராக் பாடலை பாடும் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.

பெயரையே மாற்றிய இளையராஜா

இதற்கு மத்தியில் இவர் தெலுங்கில் எஸ்பிபியுடன் இணைந்து 2 பாடல்களை பாடிய நிலையில், இவரது குரலின் மேல் நம்பிக்கை வைத்து இசையமைப்பாளர் இளையராஜா தான் 1986ம் ஆண்டு வெளியான பூவிழி வாசலிலே படத்தில் முழு பாடலை பாட வாய்ப்பு கொடுத்தார். அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே எனும் அந்தப் பாடல் தான் மனோவை தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தியது.

இந்தப் பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பாடல்கள் பாட வாய்ப்புகள் வந்த நிலையில், நாகூர் பாபு என்ற இழரது பெயரை மனோ என மாற்றினார் இளையராஜா. காரணம் ஏற்கனவே திரைத்துறையில் நாகூர் ஹனிபா போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் நிலையில், அதே பெயரைக் கொண்ட மற்றொரு கலைஞனை அடையாளப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதால் இவருக்கு மனோ என பெயரிட்டு, தமிழ் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைக்க அனுப்பினார்.

எனர்ஜி பூஸ்டராக மாறிய மனோ

இதையடுத்து, மதுர மரிக்கொழுந்து வாசம் பாடலை தன் மொத்த எனர்ஜியையும் திரட்டி பாடி தான் யார், தன்னுடைய குரல் மக்களை எப்படி சுண்டி இழுக்கும் என்பதை நிரூபித்திருப்பார்.

இந்தப் பாடலைத் தொடர்ந்து அவருக்கு வாழ்க்கை என்பதே ஏற்றமாகத் தான் இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி காந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்றோருக்காக இவர் பாடும் அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்கத் தொடங்கின.

மனோ- சித்ரா கூட்டணி

இதனால், இசைஞானி இளையராஜாவின் படங்கள் வெளியாகிறது என்றால் அதில் பாடகர் மனோவின் குரலும் இடம் பெற்றிருக்கும் என்ற நிலை வரும் அளவிற்கு வளர்ச்சி கண்டார். அத்தோடு நில்லாமல், பாடகி சித்ராவுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க ஆரம்பித்ததால், மனோ சித்ரா என இவர்கள் இருவரின் பெயரையும் ஒன்றாக இணைத்து பல பாடல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடினால் அது ஹிட் அடிக்கும் என்ற அளவிற்கு இவர்கள் இருவரும் மக்கள் மனதினை மயக்கி இருப்பர்.

எஸ்பிபியுடன் நெருக்கம்

இவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை ஒத்தது போல குரல் கொண்டிருப்பார். இதனால், இவர் பாடிய பல பாடல்களின் பெயரை எஸ்பிபி எடுத்துச் சென்றிருப்பார். திரைத்துரையில் இவருக்கு வாய்ப்பளித்தது இளையராஜா என்றால், அவரை தந்தையாக, அண்ணனாக வழிநடத்தியது எஸ்பிபி தான். இவர்கள் இருவரின் நெருக்கம் பார்க்கும் அனைவரும் கண்படும் அளவிற்கு இருக்கும்.

எச்சரித்த இளையராஜா

மனோ சிறு வயதில் இருந்தே மேடை நாடகங்களிலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்ததால், அவருக்கு பாடுவதைத் தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் அதிகரித்தது. இதையடுத்து அவர், நடிகர் கமல் ஹாசனின் சிங்கார வேலன் திரைப்படத்தில் நடித்து இவர் செய்த குறும்புகளை மக்கள் வெகுவாக ரசித்தனர். ஆனால், இது இளையராஜாவிற்கு பிடிக்காமல் போனது.

காரணம், இவர் நடிக்கச் சென்றதால், இவர் பாடும் பல பாட்டுகளை ரெக்காடிங் செய்ய முடியாமல் நாட்கள் இழுத்துக் கொண்டே சென்றது. இதனால் கோபமடைந்த இளையராஜா, நடிக்கச் சென்றால், இனி எந்தப் பாட்டும் உன் குரலுக்காக காத்திருக்காது என காட்டமாக எச்சரித்துள்ளார். இதனை தீவிரமாக எடுத்துக்கொண்ட மனோ, நடிப்பதைத் தவிர்த்து முழுநேர பாடகராக மாறினார்.

ராக் ஸ்டார் மனோ

பின், திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கொஞ்சம் கொஞ்சமாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அவருடன் இணைந்து மனோ பாடிய பல வெர்ஸ்டன் ஸ்டைல் பாடல்கள் மக்களை வெகுவாகவே ஈர்த்தது. அந்தப் பாடல்கள் அதன் துள்ளல் இசையாலும், வசீகரிக்கும் குரலாலும் இன்றளவும் நம்மை ஆட்டம் போட வைக்கிறது. உதாரணத்திற்கு காதலன் படத்தில் வெளியான முக்காலா முக்காபுலா எனும் பாடலைக் கூறலாம்.

டாக்டர் மனோ

இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமி என பல்வேறு மொழிகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

இந்நிலையில், இசைத்துறையில் 40 ஆண்டுகளைக் கடந்து 15 மொழிகளில் 35 ஆயிரம் பாடல்களை பாடி அசத்திய மனோவுக்கு ரிச் மான்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

ரஜினியின் குரல்

மனோ திரைப்பட பாடகராகவும் நடிகராகவும் மட்டுமல்லாது, இவர் திரைப்படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். தெலுங்கு மொழியில் வெளியாகும் நடிகர் ரஜினியின் படங்களுக்கு இவர் தான் தத்ரூபமாக ரஜினியின் குரலை டப்பிங் செய்வார். அதுமட்டுமல்லாமல் தமிழிலும் பல நடிகர்களுக்கு டப் செய்துள்ளார். சமீபத்தில் கூட இவர் நடிகர் தனுஷின் கலாட்டா கல்யாணம் படத்தில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு தமிழில் குரல் கொடுத்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் படத்தில் வெளியாகும் கதாநாயகனுக்கான பாடல்களை எஸ்பிபி மட்டுமே பாடி வந்த நிலையில், அதனை மாற்றி அமைத்து எஸ்பிபிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை தக்கவைத்தவர் என்ற பெருமையை பெற்றார் மனோ.

சின்னத்திரையிலும் கலக்கல்

இவர், தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தனது காலடி தடத்தை பதித்து வைத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இசை நிகழ்ச்சிகளில் நடுவர், சிறப்பு விருந்தினர் என இன்றும் தன் தொழிலில் சிறந்து விளங்குகிறார்.

விருது நாயகன்

தமிழ் சினிமாவில் சுமார் 40 வருடங்களை நிறைவு செய்த பாடகர் மனோவிற்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது, நந்தி விருது போன்றவற்றை வழங்கி சிறப்பித்துள்ளது.

வருத்தத்தில் மனோ

இப்படி, தன்னைச் சுற்றி வெறும் பாசிட்டிவ்வான விஷயங்கள் மட்டுமே நடந்துகொண்டிருந்த மனோ வாழ்க்கையில் சில மாதங்களாக பிரச்சனை தான் வந்துகொண்டிருக்கிறது. மனோவின் மகன்கள் மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதும், அவர்களை ஒரு கும்பல் தாக்கியதுமான செய்திகள் பூதாகரமான நிலையில், மனோவின் மனைவி ஜமீலாவை சிலர் மிரட்டுவது, வீட்டில் திருடிச் செல்வது போன்ற சம்பவங்கள் அவரை பாதிக்கச் செய்தன.

எது எப்படியோ, 40 ஆண்டு காலமாக மக்கள் மனதை தனது பாடல்களால் குளிர்வித்த பாடகர் மனோ இந்தப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு, தனது புது வருடத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.