மிஸ் பண்ணாம பாருங்க.. வீட்டில் இருந்தே செம என்ஜாய் பண்ணலாம்.. ஓடிடி-யில் அட்டகாசமான படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கு!
October 11 OTT Release Movies : தொடர் விடுமுறை என்பதால் இன்று ஓடிடியில் அதிகமான படங்கள் வெளியாக உள்ளது. அப்படி என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதை இதில் பார்க்கலாம்.

இந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை வருவதால் தியேட்டரில் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகி வெற்றிகராமாக ஓடி கொண்டு இருக்கிறது. அதே போல் ஓடிடியிலும் அதிகமான படங்கள் வெளியாக உள்ளது. அப்படி என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதை இதில் பார்க்கலாம்.
வாழை
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என இதுவரை இயக்கிய மூன்று படங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநராக இருப்பவர் மாரி செல்வராஜ். இந்த படங்களை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் வாழை. கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். மாரி செல்வராஜ் வலுவான திரைக்கதை, எதார்த்த காட்சி அமைப்புகள் வாழை படத்தை அனைத்து தரப்பினரையும் பார்க்க தூண்டியது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிய இந்த படம் ரூ. 35 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியது.இப்படம் இன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
படிக்காத பக்கங்கள்
செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் படிக்காத பக்கங்கள். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த கதைக்களத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கடந்த மே மாதம் வெளியான இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், பிரஜின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சுமார் நான்கு மாதம் கழித்து இந்த படம் சிம்பிளி செளத் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படம் இன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.