Nithya Menon: ‘வதந்திகள் அதிகமாக வரும் இடத்தில் மேலே வருவது.. தேசிய விருதிற்கு இதுதான் நீதி’ -நித்யாமேனன் பதிலடி!-nithya menen slipper shot reply to her recent thiruchitrambalam national film awards 2024 controversy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nithya Menon: ‘வதந்திகள் அதிகமாக வரும் இடத்தில் மேலே வருவது.. தேசிய விருதிற்கு இதுதான் நீதி’ -நித்யாமேனன் பதிலடி!

Nithya Menon: ‘வதந்திகள் அதிகமாக வரும் இடத்தில் மேலே வருவது.. தேசிய விருதிற்கு இதுதான் நீதி’ -நித்யாமேனன் பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 19, 2024 05:19 PM IST

Nithya Menen: திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும். - நித்யாமேனன் பதிலடி!

Nithya Menen: ‘வதந்திகள் அதிகமாக வரும் இடத்தில் மேலே வருவது.. தேசிய விருதிற்கு இதுதான் நீதி’ -நித்யாமேனன் பதிலடி!
Nithya Menen: ‘வதந்திகள் அதிகமாக வரும் இடத்தில் மேலே வருவது.. தேசிய விருதிற்கு இதுதான் நீதி’ -நித்யாமேனன் பதிலடி!

என்ன ஒரு அனுபவம்..

அதில், “இன்றோடு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த நேரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லைதான். ஆனாலும் நாம் கொண்டாடலாம். இதுதான் இந்தப்படத்தின் மூலமாக எனக்கு கிடைத்திருக்கும் முதல் தேசிய விருதிற்கு கொடுக்கப்படும் நீதி என்று நினைக்கிறேன்.

 

என்ன ஒரு அனுபவம்.. 

எனக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவர்கள். ஆனந்ததில் பேச முடியாமல் திணறியவர்கள், என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதுவரை நான் சந்திக்காத பலர் என்னை தூரத்தில் இருந்து தங்களுடைய அன்புள்ளம் கொண்ட இதயத்தால் ஆசீர்வதித்தனர்; வாழ்த்தினர். அவர்கள் அனைவரும், தாங்கள் தேசிய விருது பெற்றது போல என்னை உணரவைத்தனர். என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து கொடுத்த உங்களது ஆசீர்வாதம் எப்படியானது தெரியுமா?

ஒரு சிறந்த நடிப்பு என்பது எடை இழப்பு, எடை அதிகரிப்பு, பிராஸ்தடிக் மேக்கப் அல்லது பெரிய உடல் ரீதியான மாற்றங்களோடு தொடர்புடையது கிடையாது. ஒரு சிறந்த நடிப்பின் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே முழு நடிப்பு அல்ல. அதை நான் எப்போதுமே செய்ய முயற்சித்து இருக்கிறேன். அது எனக்கு பெரிதளவு உதவியும் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும்.

காரணம், நான் நடிப்பில் முன்னணி நடிகர்கள் இவ்வளவு சமமாக பங்களித்த ஒரு படத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. ஆகையால் நாம் நால்வரும் இதனை பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பலம் பற்றி வலிமையாக குரல் கொடுத்ததற்கு நன்றி. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் மேலே வருவது கடினம். நாங்கள் இன்னும் பல படங்களில் இணைந்து நடிக்க வேண்டியது இருக்கிறது.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.